பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 21, 2006

போட்டுத்தாக்கு

உள்கட்சி பூசல் இல்லாமல் கட்சியை நடத்துவேன்- புதிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ( அப்போ கட்சியில நீங்க மட்டும்தான் இருப்பீங்கன்னு சொல்லுங்க )

ஜாமீன் கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் - ஜெயலட்சுமி (சீக்கிரம் வாங்க அப்பதான் சரியான போட்டியா இருக்கும் )

ஊழலுக்கு மூலகாரணம் திமுக, அதிமுக தான் - விஜயகாந்த் ( நல்ல கண்டுபிடிப்பு, இந்த ஆண்டு நோபல் பரிசு உங்களுக்கு தான் )

வைகோ அ.தி.மு.க பக்கம் போவார் - செய்தி ( பொடா சட்டத்தில் 19 மாதம் இருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது டிரை பண்ணுங்க)

காப்பி அடிப்பதைத் தடுக்க தேர்வு மையங்களில் வீடியோ கேமரா - பிகார் அரசு அறிவிப்பு ( மாணவர்கள் என்ன ப.ஜ.க எம்பிக்களா வீடியோவிற்கு போஸ் கொடுக்க )

ரயில்களில் வழங்கப்படும் 'சிக்கன்' உணவு தாற்காலிக நிறுத்தம் - செய்தி ( சிக்கன உணவுன்னு சொல்லுங்க )

தாம்பரத்தில் குடிநீர் குழாயில் மீன்கள் - செய்தி ( தேர்தல் நேரத்தில் எல்லாம் இலவசம் போலும்)

இவ்ளோ நாளு சினிமாவுல அடிவாங்கிக்கிட்டு இருந்தேன். இனிமே கருணாநிதிக்கு என்னோட பேச் சால மரண அடி தரப்போறேன்னு சொன்னேன். பின்ன என் னங்க? அம்மா எது செஞ் சாலும் பாயாசத்துல உப்பு இல்ல; சாம் பார்ல சர்க்கரை இல்லன்னு குறை சொல்லிக் கிட்டே இருக்காரு. கேபிள் "டிவி' விஷயத்துல மக்களுக்கு நல்லது பண்ணின அம்மாவுக்கு எதிரா பேசிக் கிட்டு இருக்காரு. இவரு உண்மையிலேயே மாவீரன்னா... ஒண்டிக்கு ஒண்டி தேர்தல்ல மோதணும். ஏழு பேரைக் கூட்டிகிட்டு வர்றாரு... அதான் எனக்கு கோபம்..." - நடிகர் செந்தில் ( கவுண்டமணியிடம் வாங்கிய திட்டு+அடி போதவில்லை என்று நினைக்கிறேன் )

3 Comments:

ENNAR said...

//உள்கட்சி பூசல் இல்லாமல் கட்சியை நடத்துவேன்- புதிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ( அப்போ கட்சியில நீங்க மட்டும்தான் இருப்பீங்கன்னு சொல்லுங்க )//
எப்படி இருந்த காங்கிரஸ் இப்படியாகிவிட்டது

சீனு said...

யோவ், உன் நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு. நான் உன் வலைப்பூக்களை ரசிச்சு படிச்சிகிட்டிருக்கேன். தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்கிறது உண்மை தான்.

சீனு.

சீனு said...

//உள்கட்சி பூசல் இல்லாமல் கட்சியை நடத்துவேன்- புதிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ( அப்போ கட்சியில நீங்க மட்டும்தான் இருப்பீங்கன்னு சொல்லுங்க )//

யோவ், உன் நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு. நான் உன் வலைப்பூக்களை ரசிச்சு படிச்சிகிட்டிருக்கேன். தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்கிறது உண்மை தான்.

சீனு.