பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 20, 2006

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்: - வைகோ

Image hosting by Photobucket திமுக கூட்டணியில் மதிமுக இருக்குமா அல்லது இருக்காதா என்று கடந்த சில நாள்களாக இருந்து வந்த சந்தேகங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணி வெற்றிக்குப் பாடுபடப்போவதாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் அக்கட்சியின் தொண்டர்களும் மனம் காயப்படும் வகையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்காக அவர் அந்த அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பூர்வாங்கமாகப் பேசிவிட்ட நிலையில் கட்சி நிர்வாகிகளுடனும் மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் வைகோ.

6 Comments:

ஜோ / Joe said...

அதிமுக பக்கம் சாய்வதாக போக்கு காட்டி அதன் மூலம் திமுக கூட்டணியில் அதிக இடம் பெறுவதே வைகோ வின் திட்டம் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

Idly Vadai said...

எனக்கு இன்னும் சந்தேகமாக தான் இருக்கிறது. அவருக்கு ஓ+ ரத்தம் ! ஞாபகம் இருக்கட்டும்.

Krishna said...

read VaiKos statemrnt, in full, in MalaiMalar. I feel people like him must be encouraged.

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=107927

Idly Vadai said...

கிருஷ்ணா - தகவலுக்கு நன்றி

முத்து(தமிழினி) said...

மேட்டர் என்னவோ இங்கே பல பேருக்கு ஆசைப்பட்டது நடக்காம போன வருத்தத்தை
மனசுக்குள் வெச்சுகிட்டு சத்தம் வராமல் அழறாங்களொன்னு எனக்கு படுது.....

வைகோ சரண்டர் மற்றும் திண்டிவனம் கிக்டு அவுட் என்பது கிண்டலுக்குரிய விஷயம்.ஆனால் யாரும் கிண்டல் பண்ணலை.ஃபீல் பண்றாப்பல தெரிது.....

ஜோ / Joe said...

முத்து,
நீங்கள் சொல்வது உண்மை.
வைகோ மேல் நான் கொண்டிருந்த மரியாதையையும் நம்பிக்கையையும் கூட்டியிருக்கிறார்!