பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 13, 2006

தமிழ்மணத்தில் வைரஸ் !

தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை ! கொஞ்ச நாள்களாக தமிழ்மணத்தில் இரண்டு வைரஸ்கள் எல்லோரையும் பாடாய்ப் படுத்துகின்றன. அவை பற்றி அடிக்கடி கேட்க நினைக்கும் கேள்விகள்

இந்த வைரஸ்களை எப்படிக் கண்டுபிடிப்பது ?
கண்டுபிடிப்பது சுலபம். தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் இவர்களின் படம்/பதிவு எங்கு பார்த்தாலும் இருக்கும்.


அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ?
பெரிய பாதிப்பு கிடையாது. உங்கள் பதிவு மறைந்து போகும் அவ்வளவுதான். தமிழ்மணம் தளத்திற்கு வருபவர்களுக்கு BP ஏறும்.


ஐயோ! சரி இவர்களை எப்படி அடையாளம் காண்பது ?
தமிழ்மணத்துக்குள் போனால் ஒரே படம் நிறையா முறை தெரிந்தால் வைரஸ் வந்துள்ளது என்று அறியலாம். கண்ணாடி கழட்டிவிட்டு பார்த்தாலும் அப்படியே தெரியும்.


வேறு எதாவது அடையாளம் ?
அது வேண்டாமே!.


எப்படித் தப்பிப்பது ? ஏதாவது தடுப்பு மருந்து இருக்கிறதா ?
சுலபம், இவர்கள் எப்போது தூங்குவார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தூங்கியபின் பதிவு போடவேண்டும்.


வேறு எதாவது வழி ?
முச்சந்தி விநாயகருக்கு 108 தேங்காய், தமிழ்மணத்தின் பெயரில் அன்றைய நட்சத்திரத்தின் மேல் அர்ச்சனை செய்யலாம்.


வைரஸ் தாக்கினால் என்ன செய்யலாம் ?
வைரஸால் பதிவுகள் எழுதி மறைந்துவிட்டால், பிளாகரில் ஏதோ கோளாறு, அதனால் மீண்டும் பதிவு செய்கிறேன் என்று சொல்லாம். 'திரும்பிப் பார்க்காமல்' ஓடலாம்.


அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் வைரஸ் இருக்கிறதா ?
இருக்கின்றன. அவை டோண்டூவிற்குச் சொந்தம்


எதனால் வருகிறது ?
நிறைய பதிவு வைத்திருப்பவர்கள், ரிடையர் ஆனவர்கள் போன்றவர்களால் வருகிறது.


வேறு ஆலோசனைகள் ?
1. தமிழ்மணத்தில் ஓரத்தில் பதிவு போட நல்ல நேரம்(இவர்கள் தூங்கும் நேரம்) என்று ஒரு பகுதி வைக்கலாம்.
2. இவர்களுக்கென்றே தமிழ்மணத்தில் ஒரு பக்கம் ஒதுக்கலாம்.
3. தேன்கூடை நாடலாம்.

[ இன்று - காதலர்கள் தினத்தன்று எடிட் செய்யபட்டது ]

65 Comments:

நாமக்கல் சிபி said...

//ஐயோ! சரி இவர்களை எப்படி அடையாளம் காண்பது ?
இவர்கள் இரண்டு பேரும் கண்ணாடி அணிந்துகொண்டு இருப்பார்கள். ஒருவருக்குக் கோடாலி மீசையும் மற்றவருக்கு அந்த சமாசாரமே முற்றிலும் இல்லாமலும் இருக்கும். பின்னூட்டம் அதிகம் வாங்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.//

என்னையும்தான் சொல்கிறீரோ என்று நினைத்தேன். நல்ல வேளை.

//வேறு ஆலோசனைகள் ?
1. தமிழ்மணத்தில் ஓரத்தில் பதிவு போட நல்ல நேரம்(இவர்கள் தூங்கும் நேரம்) என்று ஒரு பகுதி வைக்கலாம்.
2. இவர்களுக்கென்றே தமிழ்மணத்தில் ஒரு பக்கம் ஒதுக்கலாம்.
3. தேன்கூடை நாடலாம்.//

சிரித்து சிரித்து வயிறு புண்ணானது போங்கள். இப்பதிவை நான் மிகவும் ரசித்தேன். இட்லி வடை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் போலும்.

(சம்மந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்)

இலவசக்கொத்தனார் said...

அதான் சொல்லிட்டீங்களே. இன் நான் என்னத்த சொல்றது. :)
நல்ல வேளை நம்மளை வம்புக்கு இழுக்கலை. ரொம்ப தாங்சுங்க.

யாத்திரீகன் said...

ஹாஹாஹா..!!!! கொஞ்சம் கடுப்படஞ்ச விஷயம், அத இவ்வளவு நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க.. :-)))))))))))))))

Anonymous said...

அவங்களை விடுங்க. இந்த டோண்டு என் பெயரிலான பின்னூட்டங்கள் என்று போட்டு எல்லோருடைய பதிவுகளையும் குப்புறத் தள்ளி தன் பதிவை அடிக்கடி மேல் எழுப்புகிறதே... அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை நீங்கள்?

கொழுவி said...

டோண்டுவையும் பாலசந்தர் கணேசனையும் சொல்கிறீர்கள் என்று பார்த்தால் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே?

சு. க்ருபா ஷங்கர் said...

நேரம் சரியில்லாட்டி பௌர்ணமிக்கு ரெண்டு நாள் முடிஞ்சு கை இப்படிதான் எழுது எழுதுங்குமாம். மூளை அதை போஸ்ட் பண்ணு, பப்ளிஷ் பண்ணுங்குமாம். :-))

Anonymous said...

கொஞ்சம் இருங்க இன்னும் சிரிப்பை அடக்க முடியல!
யப்பா பூனைக்கு மணி கட்டீட்டிங்க! நெசமாலுமே பலபேரு நொந்து நூடுஸ் ஆய்ட்டு இருக்காங்க!

Dharumi said...

ரிடையர் ஆனவர்கள் போன்றவர்களால் வருகிறது//
- 50% தான் சரி. (எனக்குத் தெரிந்த வரை தமிழ் மணத்தில் இரண்டே இரண்டு 'கேசுகள்'தான் ரிட்டையர் ஆனதுகள்! அதில் ஒரு கேசுக்கு அவ்வளவு எழுதற திறம ஒண்ணும் கிடையாது!!

ஞானவெட்டியான் said...

அன்புடையீர்,
தங்களின் வருத்தம் புரிகிறது. ஏதோ தெரியாமல் வந்துவிட்டது என மன்னிப்பும் கோரியாகிவிட்டது. இன்னுமென்ன செய்ய வேண்டும். நான் உறங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை. மதியம் 2 முத 4.30 வரை.
ஓய்வு பெற்றவர்கள்தான் தொல்லை கொடுக்கவேண்டுமென்பதில்லை. தொல்லைகள் நிறைய இருக்கின்றது.
இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்களாகி விட்டடன. அதிலிருந்து காலையில் 3 அல்லது 4 பதிவுகள்தான் வரும். அதிலிருந்து புரிந்துகொள்ளுவீர்கள் என நினைக்கிறேன். அடுத்தவரைத் தொல்லைக்குட்படுத்துவது எமது நோக்கமல்ல.
கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்.

Idly Vadai said...

திரு ஞானவெட்டியான்,
யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. அந்த எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது இல்லை. சும்மா ஒரு ஜாலிக்கு எழுதியது, சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு இட்லி வடை,
மிக்க நன்றி.
நான் தமிழ்மணத்தில் தொடரலாம் அல்லவா?

மணியன் said...

தமிழ்மண முகப்பில் இன்று tabஇல் புகைப்படம் இல்லாது பதித்தால் இந்த பிரச்னையின் பரிமாணம் குறையும்.

தற்போது புகைப்படகாரர்களுக்கு அதிக real estate கிடைக்கிறது.புகைப்படம் இல்லாதவர்கள் இடுகைகள் இடுக்குகளில் திக்கித் தவிக்கிறது.

மணியன் said...

திரு ஞானவெட்டியான், உங்கள் பதிவுகள் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பெட்டகம். தொடருங்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

Idly Vadai said...

ஞானவெட்டியான் சார்,
ஆஹா ! நான் மட்டும் தான் குசும்பு என்று நினைத்தேன். நீங்கள் ஓவர் குசும்பாக இருக்கிறீர்கள். தொடருங்கள் !

Idly Vadai said...

நாமக்கல் சிபி - அட அட எழுதாமல் விடுபட்டு போய்விட்டது. sorry. ஹோட்டலில் புச்சிகள் வராம இருப்பதற்கு புளுவா ஒரு லைட் வைத்திருப்பார்கள். பூச்சிகள் அதன் வண்ணத்தில் ஈர்க்கப்பட்டு வந்து மடிந்து போகும். உங்கள் படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :-)

Idly Vadai said...

இலவசக்கொத்தனார் - நீங்களும் நானும் எங்கே போக போறோம். திரும்பவும் சந்திக்கலாம். என்ன சரியா :-)

Idly Vadai said...

யாத்திரீகன் - :-)

கொழுவி - சந்தடி சாக்கில நீங்களே சொல்லிட்டு போயிட்டேங்க ;-)

அனானிகளுக்கு - நன்றி

தருமி - no comments

Idly Vadai said...

சு. க்ருபா ஷங்கர் - அனுபவம் பேசுகிறது!

Dharumi said...

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..(முதல் மரியாதை..)
"தருமி - no comments " ---ஏன்?ஏன்??? ஏன்.......??????

Samudra said...

ஞானவெட்டியான். சார்,

தினம் ஒரு பதிவுன்னு இருந்தா நல்லா இருக்கும்.

அப்பதானே நாங்களும் நிங்க எழுதுறத படிச்சு appreciate பன்ன முடியும்!

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பர்களே,

என் குறிப்பு காண சொடுக்குங்கள்

http://njaanavelvi.blogspot.com/2006/02/blog-post_13.html

G.Ragavan said...

இட்லி வடை, என்னுடைய கருத்துப்படி இது நகைச்சுவை இல்லை. நிச்சயமான நையாண்டி. வரம்பு மீறியிருக்கின்றீர்கள். இந்தப் பதிவை நிச்சயமாக ரசிக்கவில்லை.

G.Ragavan said...

இந்தப் பதிவில் இவ்வளவு பேசுகின்ற எவராவது...தினம் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்து சொல்கின்றவர்கள்...அவர்களுடைய வலைப்பூவில் நேரடியாகச் சொல்லியிருக்கலாமே....அதை விடுத்து....என்னவோ போங்கள்....நக்கல் செய்வதும் ஒரு கலைதானே!

Idly Vadai said...

G.Ragavan - உங்கள் கருத்துக்கு நன்றி

குமரன் (Kumaran) said...

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல பேதம் புரியல...

நிச்சயமா நம்ம இட்லிவடைக்கு பேதம் புரியல...

ஒரே ஒரு முறை நடந்து, தெரியாமல் தவறு நடந்து விட்டது என்று மன்னிப்பும் கேட்ட பிறகும் ஒருவரை மனம் புண்படும்படி 'நகைச்சுவை' என்ற பெயரில் பதிவிடுவது என்ன நாகரிகமோ....நகைச்சுவை நாகரிகம்...மண்ணாங்கட்டி.

நாளையில் இருந்து எல்லாரும் அவங்க அவங்க ஆத்தாளையும் கேலி பண்ணி எழுதுவாங்க....நகைச்சுவைன்னு மட்டும் போட்டா போதும்....

இது கருத்துச் சுதந்திரம் அல்லோ....வெங்காயம்....

கும்மியடி அநியாயத்துக்கும் நடக்கும் தமிழ்மணத்துல இந்த மாதிரி கும்மியடியும் வரத்தான் செய்யும்...என்ன செய்ய?

இதுல தான் பாட்டுக்கு இருக்கிற ஜோசஃப் சாரை வேற வம்புக்கு இழுக்கிறாங்க. வம்புக்கு ஆளா இல்லாம போனாங்க தமிழ்மணத்துல.

என்னமோ போங்க....

Muthu said...

இட்லிவடை,
தங்களின் நகைச்சுவைப் பதிவுகள் எனக்குப் பிடித்தமானவை. இப்பதிவை நீங்கள் எழுதியது முழுவதும் நகைச்சுவைக்காகவே என்று முழுமையாக நம்புகிறேன். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அவ்வாறு எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிடிக்காதவர்கள் உங்களின் பதிவினைத் திசைதிருப்பும் சாத்தியம் அதிகமுண்டு, வெறும்வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தார்போன்று என்ற பழமொழிக்கேற்ப.

ஆள்தோட்டபூபதி said...

நகைச்சுவை என்ற போற்வையில் ஒர் ஆழமான உள்குத்து/வெளிகுத்து/ கும்மாங்குத்து????

சிரிச்சி சிரிக்க வச்சி வயிறு புண்ணாச்சுடோய்!!!

Anonymous said...

//இட்லி வடை, என்னுடைய கருத்துப்படி இது நகைச்சுவை இல்லை. நிச்சயமான நையாண்டி. வரம்பு மீறியிருக்கின்றீர்கள். இந்தப் பதிவை நிச்சயமாக ரசிக்கவில்லை.//

ராகவன்,
ரசிக்கும்படித்தான் இருக்கிறது. இதை பலர் நினைத்திருப்பார்கள். இட்லி வடை எழுதியிருக்கிறார் அவ்வளவே. உங்கள் நட்பை காண்பிப்பதற்காக ஒரு நகைச்சுவை பதிவை நையாண்டியாக்கியிருக்க வேண்டாம்!

முத்து(தமிழினி) said...

நண்பர் இட்லி வடை
நக்கல் நன்றாக இருந்தாலும் நக்கல் எல்லாம் சின்ன பசங்களுக்குள்ள வெச்சுக்குவோம்.அவர்கள் மூத்தவர்கள் .கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு சமுத்ரா,

//தினம் ஒரு பதிவுன்னு இருந்தா நல்லா இருக்கும்.
அப்பதானே நாங்களும் நிங்க எழுதுறத படிச்சு appreciate பன்ன முடியும்!//

அப்படியே ஆகட்டும். வகைக்கு ஒன்று தருகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பர்களே,

இவ்விவாதத்தை இத்துடன் விட்டுவிடுவோமா?
இதைத் தொடருவதால் எப்பயனுமில்லை.
கால விரயம்தான் ஏற்படும்.

நம் பதிவுகளில் கருத்தைச் செலுத்துவோமே!

Idly Vadai said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

ஒரு பின்னூட்டம் குமரன் என்ற பெயரில் வந்திருக்கிறது, எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்ததால் அதை இங்கு பிரசுரிக்கவில்லை. அந்தாதி சொன்ன வாயில் அந்த மாதிரி வார்த்தைகள் வராது என்ற நம்பிக்கைதான்!.

கடுகளவேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக
வருந்துகிறேன். இனிமேல் கொஞ்சம் அடக்கிவாசிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இட்லிவடை அண்ணா, நான் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதில் என் மனதிற்குத் தோன்றியதை எழுதினேன் (புலம்பினேன் என்று கூட சொல்லலாம்). வார்த்தைகள் கொஞ்சம் கோபமாய் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அசிங்கமாக எதுவும் எழுதவில்லை என்று தான் எண்ணுகிறேன். உங்களுக்கு தர்ம சங்கடமாய் இருந்தால் பிரசுரிக்கவேண்டாம். ஆனால் 'பிரசுரிக்கவில்லை' என்று சொல்லி அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணம் ஏதோ அந்த பின்னூட்டம் அசிங்கமாக வந்திருப்பது போல் ஒரு உணர்வைக் கொடுக்கிறது. உங்களுக்கு நான் தான் இட்டேனா என்ற சந்தேகம் இருந்தால் தனிமடலில் சரி பார்த்துக் கொண்டு உங்களுக்கு தர்ம சங்கடமாய் இல்லாவிட்டால் பிரசுரிக்கவும்.

ஐயாவையும் ஜோசஃப் சாரையும் நகைச்சுவை என்ற பெயரில் நக்கலடித்தது வலித்தது. அதனால் வந்த புலம்பல் தான். ஐயாவே இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்பதாலும் நீங்களும் உங்கள் வருத்தத்தைத் தெரிவித்ததால் என் முதல் பின்னூட்டத்தை அனுமதிப்பதைப் பற்றி நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தப் பின்னூட்டத்தை என் விளக்கம் என்பதால் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நாமக்கல் சிபி said...

குமரன் பெயரிலும் வரத்துவங்கியாச்சா?
கிளம்பீட்டான்யா கிளம்பீட்டான்யா!

ஜோ / Joe said...

இதுக்கு பேரு நகைச்சுவையா?
நகைச்சுவை என்ற பெயரில் மூத்த பதிவர்கள் இருவரை வரம்பு மீறி கிண்டலடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

பின்னூட்டங்களை அனுமதித்ததற்கு நன்றி இட்லிவடை...

குமரன் (Kumaran) said...

இல்லை சிபி. என் பெயரில் இன்னும் யாரும் கிளம்பலை என்று தான் நினைக்கிறேன். :-)

dondu(#4800161) said...

குறிப்பிட்ட அந்த தினத்தன்று நானே ஞானவெட்டியான் அவர்களுக்கு போன் செய்து பேசினேன். அவரும் சங்கடத்தில் இருந்தார். அவர் பல பதிவுகளை நோட்பேடில் போட்டுவைத்திருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாகத்தான் போட வேண்டுமென்று எண்ணியிருக்கிறார். அதற்கு ப்ளாக்கரில் வழி இருக்கிறது. போட வேண்டிய ஒரு பதிவைத் தவிர்த்து மீதியை ட்ராஃப்ட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தனி ஆணை பட்டன் உண்டு. அது தெரியாமல் அவர் எல்லாவற்றுக்கும் பப்ளிஷ் பட்டனை அமுக்கியதுதான் அவர் செய்த தவறு. அவரிடம் நான் வருங்காலத்தில் செய்ய வேண்டியதற்கான முறையைக் கூறியுள்ளேன்.

இப்போதும் கூறுகிறேன். நேரம் கிடைக்கும்போதேலாம் ஏதேனும் பதிவுக்கான எண்ணங்கள் வரும்போது, அவற்றை புதிய பதிவாக போடுவதற்கான பக்கத்தில் போய் எழுதி பிறகு ட்ராஃப்டாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். நான் அப்படித்தான் செய்கிறேன். பிறகு உசிதமான காலத்தில் வெளியிட வேண்டும். அதற்கு முன் பதிவு தேதி மற்றும் நேரம் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொள்வதும் நலம்.

நோட்பேடல்லாம் நான் உபயோகிப்பதில்லை. நேரடியாகப் பதிவுதான்.

என்னைப் பற்றி இப்பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்து என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க என்னுடைய "பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றிய" என்னுடைய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Idly Vadai said...

ஜோ - உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

ஜோ / Joe said...

//நகைச்சுவை நாகரிகம்...மண்ணாங்கட்டி. //
குமரன்,
இதே 'மண்ணாங்கட்டி' வார்த்தை என் மனதில் தோன்றியது .எழுதவில்லை அவ்வளவு தான் .

இதையும் ரசித்து சிலர் கெக்கே பிக்கே என்று எப்படி சிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை .எனக்கும் நகைச்சுவை உணர்வு உண்டு .ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு..எல்லை தாண்டினால் அதற்கு பெயர் 'துவேஷம்' ..இட்லி வடை அவர்கள் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர் தான் .ஆனால் எப்போது நகைச்சுவை எழுதப்போய் ,அது துவேஷக் கோட்டை தாண்டாமல் கட்டுப்படுத்த முடியவில்லையோ ,அப்போது சரக்கு தீர்ந்து விட்டதாகத் தான் அர்த்தம் .துவேஷம் எழுத திறமையொன்றும் தேவையில்லை .

Idly Vadai said...

டோண்டு,

//என்னைப் பற்றி இப்பதிவில் எழுதியிருந்ததைப் பார்த்து என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.//

நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன். அப்பா இப்போழுது தான் கொஞ்சம் நம்பிக்கையே வருகிறது :-)

Voice on Wings said...

சம்மந்தப்பட்டவர்களே sportiveஆக எடுத்துக் கொள்ளும்போது, இப்பதிவுக்கு சிலர் அதீத எதிர்ப்புகளைத் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மற்ற தளங்களில் நடக்கும் ஐ.பி. சண்டைகளுடன் ஒப்பிட்டால், இதை ஒரு ஆரோக்கியமான பரிமாற்றமாகவே என்னால் பார்க்க முடிகிறது. நண்பர்களுக்குள் காலை வாரி விட்டுக்் கொள்வதில்லையா?

பி.கு. - பதிவை 'கெக்கெ பிக்கெ'வென்று இரசித்தேனென்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன். :) கிருபா ஷங்கரின் பின்னூட்டமும் சூப்பர் :)

Idly Vadai said...

Voice on Wings - சந்தோஷம், அது சரி க்ருபா ஷங்கர் எவ்வளவு கொடுத்தார் ?

Voice on Wings said...

இட்லி வடை, நீங்க குடுத்தத முதல்ல பொதுவுல அறிவிச்சுடுவோமே? ;)

Samudra said...

//இந்தப் பதிவில் இவ்வளவு பேசுகின்ற எவராவது...தினம் ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்து சொல்கின்றவர்கள்...அவர்களுடைய வலைப்பூவில் நேரடியாகச் சொல்லியிருக்கலாமே....அதை விடுத்து....என்னவோ போங்கள்....நக்கல் செய்வதும் ஒரு கலைதானே! //

அய்யோ ராகவன், நான் போகிற போக்கில் ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்பது படிக்க வசதியாக இருக்கும் என்று சொல்லிவிட்டேன்.

இதை சொன்னதால் நான் இட்லி-வடையின் "நகைச்சுவையை" ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை.

அவருடயை பதிவிலும் சொல்லியிருக்கலாம்!

I'm apolitical in this issue.

தமிழ்மனத்தில் என்ன எழுதினாலும் கூடவே ஒரு disclaimer போட்டுவிட வேண்டும் என்பது போல் ஆகிவிட்டதே.

:-(

Anonymous said...

தற்போதய புது வைரஸ் - எஸ்.பாலபாரதியின் காதல் கவிதை வரிசை :-)

Idly Vadai said...

அனானி - ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரலை :-)

யாத்திரீகன் said...

இன்னைக்கு வந்த அடுத்த வைரசை ரிபோர்ட் செய்வதுக்கு வந்தா... அதுக்குள்ள ஒரு சின்ன அடிதடியே (சும்மாகாச்சிக்கு) நடந்துருக்கா.... :-))))

tbr.joseph said...

இட்லி வடை,

உங்க பதிவில இதுவரைக்கும் வந்த எல்லா பின்னூட்டங்களையும் பொறுமையா படிச்சேன்..

நீங்க எழுதுனது சிலருக்கு தமாஷா இருந்திருக்கு.. வேற சிலருக்கு எரிச்சலா இருந்திருக்கு..

ஆனா கோ.ராகவன் நட்பைக் காட்டுவதற்காக இப்பதிவை கண்டனம் செய்கிறார் என்று ஒருவர் எழுதுவது கொஞ்சம் கீழ்த்தரமான கருத்து..

நானும் நகைச்சுவையாய் எழுதுபவந்தான்.. ஆனால் என்றுமே எல்லை மீறியதில்லை..

நான் எழுதுவது என்னுடைய ஆத்ம திருப்திக்காகவே என்பதை முன்பே கூறியிருக்கிறேன்..

நான் அப்படியொன்றும் தமிழ்மணத்தின் முகப்பை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி இடுகைகளை இடுவதில்லை..

என்னுடைய அலுவலக வாழ்வில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். அதற்கு பின்னூட்டம் வந்தால் சந்தோஷம். இல்லையென்றால் அதற்காக வருத்தப்படப்போவதில்லை..

நான் எழுதும் தொடர் நாவல் சூரியனும் அவ்வாறே.. அதுவும் என்னுடைய வங்கி வாழ்க்கையில் நான் சந்தித்த நபர்களைக் கதாநாயகர்களாக உலாவ விடுகிறேன்..

நீங்கள் நகைச்சுவையாக எழுதினீர்களோ என்னவோ அதைப் பற்றி கவலைப்பட்டு என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.. என்னுடைய அலுவலில் சுமார் பதினெட்டு மணி நேரம் வேலை பார்ப்பவன் நான்.. ஏதோ வேலையில்லாமல் எழுதுபவன் அல்ல..

அன்புடன்,
பொறுமையுள்ள,
மீசை இல்லாத ஏன் தலைமுடியே இல்லாத.. சற்றே மனத்தாங்கலடைந்த,
டிபிஆர்.

பி.கு.
பின்னூட்டங்கள் வரவில்லைதான். ஆனால் சராசரியாக 200லிருந்து 300 வரை என்னுடைய தி.பா தொடரையும் சுமார் 80லிருந்து 100 வரை என்னுடை சூரியன் தொடருக்கும் வாசகர்கள் தினசரி வருகிறார்கள் என்பது இட்லி சாம்பாருக்கு (சாரி வடைக்கு) தெரியுமா என்று தெரியவில்லை..

Anonymous said...

innaabaa idlyvadai... ipdi panni poota? periyorai viyakalenalum igazhthal koodathubaa...
idly vadai ipdi oosi pona vadai aayitiye?

Idly Vadai said...

அன்புள்ள திரு டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களுக்கு,

உங்களின் மன வருத்ததை பின்னூட்டத்தில் தெரிந்துக்கொண்டேன். அதற்கு வருந்துகிறேன்.
நீங்கள் சொல்லுவது போல் நான் எழுதியது சிலருக்கு தமாஷாகவும் சிலருக்கு எரிச்சலாகவும் மிக்ஸட் ஃபிலிங்காக இருந்திருக்கிறது. ஆக சிரிப்புபோ எரிச்சலோ பாதிப்பு இருந்திருக்கு :-)

நகைச்சுவை என்று கருதியே நான் இதை எழுதினேன் - நண்பர்களுக்குள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து பேசிக்கொள்ள மாட்டோமா அதேபோல். ஆனால் அப்படி இல்லை என்று சில பின்னூட்டங்கள் வந்த பின் தெரிந்தது.

இந்த பதிவினால் நான் பெரியவர்களின் நட்பை இழக்க விரும்பவில்லை. கடைசியில் நட்பு தமாஷாகிவிட கூடாது! அதனால் உங்கள் பெயரையும், திரு ஞானவெட்டியான் பெயரையும் எடிட் செய்துள்ளேன்.

என்னையும் மதித்து, பொறுமையாக படித்து, பொறுமையாக இவ்வளவு பெரிய பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி :-)

மிக்க அன்புடன்,
இட்லிவடை

பிகு: உங்கள் வாசகர் வட்டதை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. புள்ளி விபரத்திற்கு நன்றி :-).

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//சம்மந்தப்பட்டவர்களே sportiveஆக எடுத்துக் கொள்ளும்போத//

இன்னமும் இப்படி நம்புகிறீர்கள் என்பது தான் வேதனையான வேடிக்கை.

உங்களது பல நகைச்சுவை நையாண்டிகளை ரசித்திருக்கும், உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன், என்ற தகுதியில் சொல்ல விரும்புவது "இப்பதிவு நகைச்சுவையாகவோ, ரசிக்கத் தக்கதாகவோ இல்லை" என்பது.

நன்றி.

Idly Vadai said...

//சம்மந்தப்பட்டவர்களே sportiveஆக எடுத்துக் கொள்ளும்போத//

சுந்தர் - அது நான் எழுதிய பின்னூட்டம் இல்லை :-).

என்னுடைய பல நகைச்சுவையை ரசித்ததற்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

//உங்களது பல நகைச்சுவை நையாண்டிகளை ரசித்திருக்கும், உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவன், என்ற தகுதியில் சொல்ல விரும்புவது "இப்பதிவு நகைச்சுவையாகவோ, ரசிக்கத் தக்கதாகவோ இல்லை" என்பது//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் இட்லிவடை.

அளவு மீறிய கிண்டலாக நான் உணர்வதற்கான காரணங்கள்:

1. ஞானவெட்டியான் தவறுதலாகச் செய்துவிட்டதாக ஒரு Apologetic பதிவு இட்டபிறகும் இதை வெளி இட்டது.

2. உருவ அமைப்புகள் கிண்டலடிக்கப்பட்டது.

3. ரிட்டயர் ஆனவர்கள் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்.

நான் உங்களைக் கண்டிக்கவில்லை. (யாரையும் கண்டிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது-இல்லையா?) இது உங்கள் சுதந்திரம், உங்கள் ரிஸ்க்!

நாமக்கல் சிபி said...

//ஐயோ! சரி இவர்களை எப்படி அடையாளம் காண்பது ?
தமிழ்மணத்துக்குள் போனால் ஒரே படம் நிறையா முறை தெரிந்தால் வைரஸ் வந்துள்ளது என்று அறியலாம். கண்ணாடி கழட்டிவிட்டு பார்த்தாலும் அப்படியே தெரியும்.//

இது முன்பை விட நன்றாயிருக்கிறது!

//அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் வைரஸ் இருக்கிறதா ?
இருக்கின்றன. அவை டோண்டூவிற்குச் சொந்தம்//

இந்த வரிகளையும் நான் மிகவும் ரசித்தேன். இருப்பினும் சொல்வதற்கு பயமாக இருந்தது. இப்போது பயமின்றி சொல்கிறேன். டோண்டு சார் கோவிச்சிக்கலை.


மற்றபடி இருவரும் மனம் புண்பட்டிருப்பினும் பக்குவமாக விளக்கம் தந்துள்ளனர். குழந்தைகளின்
விளையாட்டுகளை மன்னித்து மறப்பார்களாக!

Idly Vadai said...

சுரேஷ் - நன்றி.

நாமக்கல் சிபி - பாராட்டுக்கு நன்றி.

dondu(#4800161) said...

மறுபடியும் டோண்டு ராகவன்.

புது தமிழ்மணம் வரும் முன்னர் புதிதாக இடப்பட்டப் பதிவுகள் அப்போதையத் தமிழ்மணத்தால் திரட்டப்பட பல மணி நேரங்கள் ஆயின. அப்போது ஜோசஃப் அவர்கள் இதை பற்றிக் குறிப்பிட, நான் ஒரு பின்னூட்டத்தில் கிட்டத்தட்ட இவ்வாறு கூறினேன்.

"என்ன செய்வது சார், ரவுண்ட் ராபின் முறை போன்று ஏதோ ஒன்றிருக்கிறது, ஆகவே பதிவுகள் கியூவில்தான் திரட்டப்பட வேண்டும். பதிவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அதே நேரம் நம்மைப் போன்ற பெரிசுகள் அடிக்கும் கொட்டம் வேறு" என்று எழுதியிருந்ததை அவர் மிகவும் ரசித்து சிரித்தார்.

உங்களுடைய இப்பதிவில் உருவ விவரங்கள் மட்டும் சற்று மனத்தங்கலுக்கு காரணமாகி விட்டன என்று நினைக்கிறேன்.

அதே நேரம் என்னைப் பற்றிய ஒன் லைனரை மிகவும் ரசித்து சிரித்தேன்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்க என்னுடைய "பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றிய" என்னுடைய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_113188854570236465.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Idly Vadai said...

டோண்டு,

தொடர் வருகைக்கு நன்றி.
//உங்களுடைய இப்பதிவில் உருவ விவரங்கள் மட்டும் சற்று மனத்தங்கலுக்கு காரணமாகி விட்டன என்று நினைக்கிறேன்//

நீங்கள் சொல்லுவது சரி, அதை நேற்றே எடிட் செய்துவிட்டேன்.

//பெரிசுகள் அடிக்கும் கொட்டம் வேறு// இதை நான் எழுதியிருந்தால் அதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும் :-)

நீங்கள் ரசித்த ஒன் லைனரை பலர் ரசித்திருக்கிறார்கள்.

நாமக்கல் சிபி said...

//அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ?
பெரிய பாதிப்பு கிடையாது. உங்கள் பதிவு மறைந்து போகும் அவ்வளவுதான். தமிழ்மணம் தளத்திற்கு வருபவர்களுக்கு BP ஏறும்.
//

தற்போது இந்த பாதிப்பி குறைவதற்கு மருந்து கண்டு பிடித்து விட்டார்கள் போல!

Idly Vadai said...

நாமக்கல் சிபி,

நாரதர் கலகம் எப்போதும் நன்மையில் தான் முடியும்.

நாமக்கல் சிபி said...

//நாரதர் கலகம் எப்போதும் நன்மையில் தான் முடியும்//

நானும் இதே வேலைதான் காலேஜ்ல படிக்கும்போது செஞ்சேன்! கிடைச்ச பட்டம் சகுனி!
ம்ம்..நல்லது நடந்தா சரி.

(இதன் நகல் பின்னூட்டம் :
http://www.blogger.com/comment.g?blogID=22586472&postID=114015611904662799)

Idly Vadai said...

நாமக்கல் சிபி,

பார்க்க இந்த பதிவு :
http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_114015739854640922.html
அதனால் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//பார்க்க இந்த பதிவு :
http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_114015739854640922.html
//

அந்த பதிவை தற்போதைய பின்னூட்டங்களுடன் மீண்டும் பார்க்கவும். நானே கொஞ்சம் ஏமாந்துதான் போனேன்!

:)

(இதன் நகல் : http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

பொன்ஸ்~~Poorna said...

இட்லிவடை,
இந்தப் பதிவு இப்போ தான் என் கண்ணுக்குக் கிடைச்சிது.. ஒருமாதிரி டைமிங் ஜோக்கா இருந்தாலும், அந்த டைம்ல நான் தமிழ்மணத்தில் இல்லைன்னாலும், தெளிவா புரியுது, வாய்விட்டு சிரிக்க முடியுது..
ஒரு வேளை வயசானவங்களுக்கு சிரிக்க முடியலையோ என்னவோ..

நீங்க இந்த மாதிரி நிறைய காமெடி பதிவு போட்ருக்கீங்கன்னு கேள்விப் பட்டேன் ( தமிழோவியத்துல பினாத்தலார் சொன்னாரே).. அந்த லிங்கெல்லாம் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா, படிச்சி சிரிக்க வசதியா இருக்கும்.. உங்க டெம்ப்ளேட்ல பழைய பதிவுகளை எப்படி கண்டுபிடிக்கிறதுங்கறது தலையப் பிச்சிக்கிற வேலையா இருக்கும் போலிருக்கு..

Idly Vadai said...

பொன்ஸ் - இதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியலை.