பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 11, 2006

பட்டாளி மக்கள் கட்சி

Image hosting by Photobucket பா.ம.க., ராமதாசுக்கு திடீரென தமிழ் மீது பாசம் வந்துவிட்டது. இனி கட்சியினர் எல்லாரும் தங்கள் இனிஷியலைக் கூட தமிழில்தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறந்தது. இதற்கும் ஒரு படி மேலே போய் வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு பதில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவியாக ஆங்காங்கே தமிழ் அகராதி போல விளக்கப் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் பாட்டாளிகளின் முயற்சியால் விளக்க போர்டுகள் வைக்கப்பட்டன. குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அப்படி வைக்கப்பட்ட ஒரு போர்டில் "பாட்டாளி மக்கள் கட்சி' என்ற வாசகம் "பட்டாளி மக்கள் கட்சி' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஊரைத் திருத்தும் முன்னர் தங்கள் கட்சியினரை ராமதாஸ் முதலில் திருத்த முயற்சிக்க வேண்டும் என்று கிண்டல் அடிக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

செய்தி, படம் தினமலர்

4 Comments:

Anonymous said...

பட்டாணி மக்கள் கட்சின்னுகூட சொல்லலாமோ?

பட்டாணியன்

Agent 8860336 ஞான்ஸ் said...

ஏஜண்ட் = முகவர்.

அப்போ நானும் மாத்திக்கனுமா?

யார் அவரிடம் என்னைப் பற்றி போட்டுக் கொடுத்தார்கள் என்று தெரியும்!

மாயவரத்தான்... said...

'அவனை மாத்த சொல்லு நான் மாத்துறேன்'...நாயகன் ஸ்டைலில் படிக்கவும்.

'சன் டி.வி.யை மாத்த சொல்லு, நாங்களும் மாத்துறோம்'

சீனு said...

அட, எங்க ஊருல ஒரு பா.ம.க போர்டுல, G.K.மணி-யோட பேரு இப்படி வந்துச்சு..."கோ.க.மணி ச.ம.உ எம்.ஏ"-ன்னு.

ச.ம.உ - சட்ட மன்ற உருப்பினர் --> OK.
எம்.ஏ-க்கு தமிழ்ல என்னன்னு தெரியலையா?

சீனு.