பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 11, 2006

மகாபாரதமும் மாமிபாரதமும்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக அணியில் சேர வைகோ முன்வர வேண்டும் என்று அதிமுக அவைத் தலைவர் கா. காளிமுத்து அழைப்பு விடுத்தார்:


மூங்கில் காட்டில் தீ ஏற்பட்டால் சந்தன மரமும் எரிந்து சாம்பலாகும். திமுக கூட்டணியில் உள்ள நல்லவர், நியாயமானவர் வெளியேற வேண்டும். துரியோதனன் கூட்டத்தில் இருந்த துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற நல்லவர்களும் மாண்டனர். நல்லவரான கர்ணன் வெளியேற வேண்டும். நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். பாண்டவர் அணிக்கு வந்தால் வாழலாம். இதை வைகோ உணர்ந்தால் சரி !காளிமுத்து கதைக்கு வைகோ தொண்டன் பதில் இங்கே


அதை தொடர்ந்து இன்று கருணாநிதி கண்ட கனவு -


துரியோதனன் அணியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியேறி அதிமுக அணிக்கு வர வேண்டும் என சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா. காளிமுத்து சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

அதை நினைவுபடுத்தி விளக்கம் அளிக்கும் வகையில் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

துரியோதனன் அணியில் இருந்து கர்ணனை தங்கள் பக்கம் வருமாறு பாண்டவர்கள் அழைப்பதைப் போல கனவு கண்டேன். உரையாடல் செல்போனில் நடந்தது.

முதலில் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் செல்போனில் பேசுகிறார். உன்னை போன்ற உத்தமர்கள் துரியோதனர் பக்கம் இருக்கக் கூடாது. எனவே, எங்கள் பக்கம் வந்துவிடு என்றார் அவர்.

பின்னர் செல்போனை வாங்கி பாஞ்சாலி பேசுகிறார். பாரதப் போரில் எங்கள் பக்கம் வந்து உதவலாமே. வெல்லப் போவது நாங்கள் தான் என்று அவர் கூறினார்.

""பாஞ்சாலியின் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன். ஆனால், வெற்றியினால் மட்டும் ஒருவரின் பெயரும் புகழும் நிலைத்திருப்பதில்லை. மகாபாரத யுத்தம் நடந்து முடிந்து, இப் போராட்டம் பற்றிய கதை மட்டும் வாழ்கிற போது, மனைவியைப் பணயம் வைத்து சூதாடியவன் தர்மன் என்பதும், சாவு சதிராடும் போர்க்களத்தில் கூட கொடை கொடுத்த வள்ளல் கர்ணன் என்பதும் அழியாத அத்தியாயங்களாக இருக்கும்'' என்று கர்ணன் சொல்கிறார்.

""ஆனாலும், ஒன்று சொல்கிறேன். அன்று பாரதப் போர் நடந்ததை நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள். அந்தப் போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் ஜெயித்துவிட்டீர்கள். அது வேறு யுகம். இது உங்கள் பாஷைப்படி கலியுகம். எங்கள் பாஷைப்படி ஜனநாயக யுகம். இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும், பாஞ்சாலியின் பசப்புகளுக்கும் இடம் இல்லை. அவை எடுபடாது. வெற்றி எங்களுக்குதான்'' என்று கர்ணன் மேலும் சொல்கிறார்.

இதன் பிறகு கர்ணனின் சிரிப்பொலியில் கண் விழித்தேன் என கூறியுள்ளார் கருணாநிதி.

1 Comment:

Boston Bala said...

Atleast one thing they both accept... Pandavas & Gauravas belong to the same clan/family :P