பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 10, 2006

கரடி விட்ட ஜெ - கலைஞர்

ஜெ சொன்ன குட்டி கதைக்கு கலைஞர் அறிக்கை


குட்டிக் கதை ஒன்றை கோயம்பேடு மாநாட்டில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதா சொன்ன கதையில் அவர் அறிவிக்கும் சலுகைகளும், திட்டங்களும் கம்பளி மூட்டை போல காணப்பட்டாலும் உண்மையில் அது ஏமாந்தவர்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் கரடி என்பதை அவரே மனம் திறந்து வெளியிட்டிருக்கிறார். கதவு திறந்திருக்கிறது என்று கூறியவர் இப்போது கம்பளி மூட்டையைக் காட்டுகிறார். மனந் திறந்து அது கம்பளியல்ல; கரடி என்பதை இந்தக் கதை மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த மர்மத்தை முன்கூட்டியே கூறியதற்காக நாடு அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறது.

கதவை திறந்து வைத்துப் பார்த்தார், இப்போது கரடி விட்டுப் பார்க்கிறார். இவரது கோயம்பேடு கோலாகலத்தையும் கரடிவிடும் வேலைகளையும் பிப்ரவரி 8 கூட்டணி கட்சிகளின் உறுதி வாய்ந்த முழக்கம், முடக்கிப் போட்டு விட்டது என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை.


- கலைஞர் கருணாநிதி

3 Comments:

டி ராஜ்/ DRaj said...

இட்லிவடை: கொஞ்சம் பிசி ஆகிட்டதால உங்களோட கேள்விக்கு பதில் போடலை. ஸாரி
அன்புடன்
ராஜ்

Agent 8860336 ஞான்ஸ் said...

ஜெ. சொன்ன கதைய விட, அதுக்கு கலைஞர் குடுத்த வெளக்கம் சூப்பர்;

இதக் கேட்டு ஜெ. ரொம்ப டென்ஷன் ஆயிருப்பாங்க, இந்த கரடி கதய எழுதிக் கொடுத்த ஆளு தொலஞ்சாரு!!

ENNAR said...

சும்மா சொல்லக்கூடாது இருவருமே நல்ல கரடி விடுராங்க