பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 09, 2006

'கரடி' கதை

தமிழக முதல்வர் திரும்பவும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார். நேற்று அவர் சொன்ன கரடி கதை -

அது ஒரு மழைக்காலம். ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வருகிறது. ஆற்றின் கரையோரத்தில் நின்ற 4 பேர் அக்கரைக்குச் செல்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நடு ஆற்றில் கருமையான, மூட்டை போல ஏதோ ஒன்று மிதந்து வந்தது.

உடனே, "அது என்ன என்று பாரப்பா!' என்றான் ஒருவன். "அது, ஒரு கம்பளிபோல் தெரிகிறதே'! என்றான் இரண்டாமவன். "ஆமாம், கம்பளியேதான்,'என்றான் மூன்றாவன்.

தைரியசாலியான நான்காவது ஆள், "இதை மழைக் காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று கூறி ஆற்றில் குதித்து கம்பளியைத் தாவிப் பிடித்தான்.

ஆனால், கம்பளி மூட்டை போன போக்கிலேயே அவனும் வெள்ளத்தில் போனான்.

உடனே மற்ற மூவரும், "கம்பளியை விட்டு, விட்டு கரைக்குத் திரும்பு,' என்று கத்தினர்.

வெள்ளத்தில் சிக்கியவனோ, தனது நண்பர்களை நோக்கி, "நான் எப்போதோ கம்பளியை விட்டு விட்டேன். அதுதான் என்னை விடமாட்டேன்,' என்கிறது என்றான்.

உண்மையில், அது கருப்பு மூட்டை கம்பளி அல்ல. அது ஒரு நிஜமான கரடி.

வெள்ளத்தில் சிக்கிய கரடி தனக்கு ஏதாவது பற்று கிடைக்காதா, கரை சேர முடியாதா எனத் தவித்துக் கொண்டிருந்தது.

தனது உடலை மூட்டை போல சுருட்டிக் கொண்டு மிதந்தது. இதை நம்பி ஏமாந்து தன்னைப் பிடித்துக் கொண்டவனை வெள்ளத்தில் அமுக்கிக் கரை சேரப் பார்த்தது கரடி.

ஆனால், கரடியிடம் மாட்டிக் கொண்டவன் ஏமாளி அல்ல. தனது கால்களைப் பயன்படுத்தி கரடியிடம் இருந்து தப்பி கரை சேர்ந்தான் அவன்.

உடலைக் காக்க உதவும் என நினைத்த கம்பளி, உண்மையில் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கரடி என்ற விவரம் தாமதமாகத் தான் நண்பர்களுக்குத் தெரிந்தது.

இந்தக் கதையில் கரடி யார் என்பதையும், அப்பாவி நண்பர்கள் யார் என்பதையும் உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

தகவல் : தினமணி

3 Comments:

டி ராஜ்/ DRaj said...

இக்கதைக்கு கலைஞரின் பொழிப்புரையை கேட்டீர்களா? இந்த தேர்தல் சுவராஸ்யமாகவே இருக்குமென நினைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

அவரு என்ன சொன்னாரு. கொஞ்சம் விவரமாத்தேன் போடுங்களேன்.

IdlyVadai said...

ராஜ் - அதை நான் படிக்கவில்லை. எங்கே இருக்கிறது - லிங்க் கொடுக்க முடியுமா ?