பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 07, 2006

போட்டுத்தாக்கு

ஒரு நாள் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம்பெறுவேன் - கங்குலி உறுதி ( நல்லா விளையாடுவேன் என்று என்னிக்கு உறுதி எடுக்கப்போறீங்க ? )

ஒரு நாள் போட்டிகளில் பரிசோதனை முயற்சிகளில் இறங்க மாட்டோம்: திராவிட் ( சரியா விளையாடலைனா பிரேதபரிசோதனை தான் )

லட்சுமி விலாஸ் வங்கி லாபம் ரூ. 8 கோடி ( லட்சுமின்னு பேர் வெச்சி லாபம் வரலைனா எப்ப )

புதிய தமிழகம் கட்சி 150 இடங்களில் போட்டியிட முடிவு ( புதிய தமிழகத்தில் தான் இவர்கள் போட்டி போட முடியும் )

பின்லேடனைப் பிடிச்சா 10 கோடி கொடுப்போம் - அமெரிக்க அதிபர் புஷ் ( அப்படின்னா அந்த 10 கோடியை எனக்குக் கொடுங்க. பின்லேடனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.)

விமான நிலைய ஆணைய ஊழியர்கள் வேலைநிறுத்ததால் விமான நிலையம் குப்பை கூளமானது - செய்தி ( குப்பைகளை சுத்தம் செய்ய தனியாரிடம் விடப்போகிறீர்களா )

தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க கூட்டணிக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க மாட்டோம் - மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் ( கமெண்ட் தேவையா ?)

லட்சம் கிராமங்களில் கணினி உதவியுடன் தகவல் சேவை மையங்கள் - மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ( நிறைய கிராமங்களில் மின்சாரமே இல்லை அதுக்கு முதல்ல வழி செய்யுங்க )

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - ப.ஜ.கா ( கூட்டணி குழப்பமே இல்லாத ஒரே கட்சி )

5 Comments:

Agent 8860336 ஞான்ஸ் said...

//எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை - ப.ஜ.கா //

எந்த கட்சியுடனும் கூட்டணி கெடக்கவே இல்லை

:-(

Idly Vadai said...

ஞான்ஸ் - நல்லா இருக்கே !

கீதா சாம்பசிவம் said...

you have not changed the cartoon for the last one week. change the cartoon. we want to enjoy.very wonderful comments.

Agent 8860336 ஞான்ஸ் said...

நன்றி இட்லிவடை.

ஆனாலும் ஒங்க அளவுக்கு ந(தூ)க்கலா கமெண்ட் போட்றது கஷ்டம்ங்க!
:-)

Idly Vadai said...

கீதா - அட இதேல்லாம் கூட பாக்கறீங்களா ? மாத்திபுட்டேன்.
ஞான்ஸ் - :-)