பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 03, 2006

போட்டுத்தாக்கு

ஒட்டுமொத்த அணியினரின் ஆட்டமே தோல்விக்குக் காரணம் - இந்திய அணியின் காப்டன் ராகுல் திராவிட் ( நல்ல வேளை, தோல்விக்கு காரணம் பாக்கிஸ்தான் தான் என்று சொல்லாமல் போனாரே )

கூட்டணி பங்கீடு பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் - இளங்கோவன் ( கட்சி FEமெலிடம் என்று சொல்லுங்க சார்)

புதிய முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்கிறார் - செய்தி ( பார்த்து சார், கடவுள் பெயரால்... என்பதற்கு பதில் கொடா பெயரால் என்று பதவியேற்க போகிறீர்கள் )

திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு - கலைஞர் ( So எதோ பிரச்சனை இருக்கு )

வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் மட்டும் போட்டி - விஜயகாந்த் ( சினிமாவை விட அரசியலில் நல்ல காமெடி பண்ணுறீங்க )

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறும் எண்ணம் இல்லை - கங்குலி ( அப்பா பெரிய கவலை விட்டது )

"மேடம் ராப்ரி தேவிக்கு ஒதுக்கியுள்ள எண். 10 சர்குலர் சாலையில் உல்ள புது வீட்டுக்குச் செல்லத் தயாராகி விட்டோம். சில ஆடுகள், மாட்டுச் சாணத்தைத் தவிர எஞ்சிய அனைத்தையும் புதிய வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டோம்" - ( இதற்கு நல்ல பின்னூட்டமிடலாம், சிறந்த பின்னூட்டம் நாளை தேர்வு செய்யப்படும் )

8 Comments:

டி ராஜ்/ DRaj said...

awesome.
ராப்ரி பற்றிய செய்திக்கு என் பின்னூட்டம்:

"பாத்து நிதானமா எல்லாத்தையும் எடுத்துட்டு போங்க. பிள்ளைகள்ல ஒண்ணு ரெண்ட விட்டுட்டு போயிடாதீங்க"

Idly Vadai said...

ராஜ் - ரசித்தேன்.

enRenRum-anbudan.BALA said...

ரசிக்கும்படியான பதிவு !!!!

மற்றபடி, 'இட்லி போண்டா' குறித்து உங்கள் அபிப்பிராயத்தை அறிய ஆவல் ;-)

-- எ.அ.பாலா

Idly Vadai said...

எ.அ.பாலா - நீங்க கூட லல்லு மாதிரியே பேசறீங்க :-)

Kusumban said...

சர்குலர் சாலையிலேர்ந்து மத்தவங்களை சக்கர்ல (டெல்லி தமிழ்ங்ணா... அஃதாவது சுத்தல்ல) விடப்போறீங்கன்னு சொல்லுங்க ;-)

Idly Vadai said...

அட எப்போ தூக்கதிலிருந்து எழுந்தீங்க ? பேஷ் பேஷ். உங்களிடம் நல்லதொரு punchயை எதிர்பார்தேன்
:-)

Idly Vadai said...

ராஜ் சொன்ன கமெண்ட் நன்றாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. என்னுடைய கமெண்ட் - "மாட்டுத் தீவினம்(ஊழலில்) நிறைய சாப்பிட்ட தால் நிறைய சாணி வந்திருக்கும் அதான் அள்ள முடியவில்லை"


கலந்து கொண்ட ராஜ், குசும்பன் ஆகியோருக்கு நன்றி.

டி ராஜ்/ DRaj said...

இட்லி வடை:
நன்றி. :) உங்களின் கமெண்டும் அருமை.