பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 16, 2006

ரஜினிகாந்த் சொன்ன 2 குட்டிக் கதைகள்

இப்போது குட்டி கதை சீசன் என்று நினைக்கிறேன்.


கே.பாலசந்தர் டைரக்டு செய்துள்ள `பொய்' பட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு 2 குட்டி கதைகள்சொன்னார்.


``அஸ்தினாபுரத்தில் பீஷ்மர் தனது பேரன்களுக்கு மல்யுத்தம், வில்யுத்தம் கற்றுக்கொடுக்க ஒரு குருவை தேடினார். அந்த குரு வேறு யாருமல்ல. துரோணர்.

திருதராஷ்டிரன் போய் துரோணரிடம் குருவாக இருக்கும்படி கேட்டார். அப்போது துரோணர், ``சிஷ்யர்களை நான்தான் தேர்வு செய்வேன் என்றார். அதன்படி எல்லா சிஷ்யர்களுக்கும் ஒரே மாதிரி உடையுடுத்தி, நடக்க- உட்கார சொல்லி அவர்களின் சாமுத்ரிகா லட்சணத்தை பரிசோதித்தார்.

ஏனென்றால், அவருடைய உத்தி வீணாகி விடக்கூடாது என்பதால்தான். துரோணர் போல்தான் பாலசந்தர் சார்.

என் முதல் குருவும் அவர்தான். முதல் ரசிகரும் அவர்தான். எனக்கு சிகரெட்டை தூக்கிப்போட்டு ஸ்டைல் கற்றுக்கொடுத்தவர் அவர்தான். இப்படி செய்... ஜனங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லிக் கொடுத்தவர் அவர்தான்.

என்னை வாழ வைத்த தெய்வம், பாலசந்தர். அவர் எனக்கு தொழிலை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. எனக்கு கஷ்டங்கள் ஏற்பட்டபோது, முன்னால் வந்து நின்று என் கஷ்டங்களை போக்கினார். ஆனால் அவருக்கு துன்பம் ஏற்பட்டபோது, நான் போய் முன்னால் நிற்கவில்லை. அதற்காக, அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.


ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, அந்த இடத்துக்கு போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்'' என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்தித்தார்கள். ``உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று குரு கேட்டார். ஒருவன் சொன்னான் எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும் என்றான். எடுத்துக்கொள்'' என்று குரு சொன்னார்.

இன்னொருவன், ``எனக்கு நிம்மதி மட்டும் போதும்'' என்றான். ``எடுத்துக்கொள்'' என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனை சந்தித்தார். ``எனக்கு பணம் வந்தது. ஆனால் நிமëமதி இல்லை'' என்று சொன்னான். நிம்மதி கேட்டவன், ``எனக்கு நிம்மதி இருக்கிறது. சந்தோஷம் இல்லை என்றான்.

பணம் கேட்டவனிடம் ``நீ சம்பாதித்த பணத்தை நீயே வைத்துக் கொண்டாய் அதனால்தான் நிம்மதி இல்லை'' என்று குரு சொன்னார்.


அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, ``நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவி செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்கள்'' என்றான்.

``ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு'' என்று குரு சொன்னார்.


பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதை செய் என்று குரு அறிவுரை சொன்னார்.

பாலசந்தர் சார் பணம் வருவதாக இருந்தால் கூட அதை விரும்பாமல், அவர் விருப்பப்பட்ட தொழிலைத்தான் செய்வார். இதேபோல் அவர் இன்னும் பத்து வருடங்கள், பதினைந்து வருடங்கள் டைரக்டு செய்து பல புதுமுகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்''

5 Comments:

டி ராஜ்/ DRaj said...

//எனக்கு சிகரெட்டை தூக்கிப்போட்டு ஸ்டைல் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்/
அப்போ இவ்வளவு நாளு பெங்களூரில இருந்தப்பவே சிகரெட்ட தூக்கி போட்டு ஸ்டைலா இருப்பேன்னு சொன்னதெல்லாம் பொய்யா?

சந்தோஷ் aka Santhosh said...

ராஜ் தலைவர் சென்னா கேட்டுகணும் குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது. அப்புறம் ரசிகர் மன்றத்துல இருந்து விலக்கி வச்சிடுவாங்க.தலைவர் செல்றது எல்லாம் பழமொழி மாதிரி அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.

துபாய்வாசி said...

புரிஞ்சா மாதிரி தான் இருக்கு, ஆனாலும் புரியலே. ரஜினி சொன்னா அப்படித் தானே இருக்கும்?

ஆள்தோட்டபூபதி said...

இட்லி வடை ,
வடைகறி சாப்பிட்டது போல் திருப்தியாக இருந்தது தலைவரின் கதை. அதை எங்களுக்கு பரிமாரிய உங்கள் பதிவுக்கு நன்றி(டிப்ஸ்).

ராஜ்,
பாலச்சந்தரால சிகரட்டை தூக்கிபோட்டு புடி, யானைய தூக்கி போட்டு புடி அப்பிடீனு சொல்லத்தான் முடியும் ஆனா அதை செயல் படுத்த சூப்பர்ச்டாரால மட்டும் தான் முடியும்..............

டி ராஜ்/ DRaj said...

சந்தோஷ் & ஆள்தோட்டபூபதி: சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு. ஆனாலும் வாயை மூடிக்கறேன், நெறய உச்ச நட்சத்திர ரசிகர்கள் இருக்கீங்க போல....