பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 23, 2006

சைவம் x அசைவம்

"இந்து சமயம் என்றால் அது சைவ சமயம் தான். திருமாவளவன் சைவ உணவு தான் சாப்பிடுகிறேன் என்றார். அவரை நாம் ஆசீர்வதிக்கிறோம். தலைவன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி! தன் தொண்டர் களும் சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என திருமாவளவன் உத்தரவிட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் சைவ உணவை உட்கொள்ள வேண்டும். மீனை விட்டு விடுங்கள். மாடு, ஆடு, ஒட்டகத்தை வெட்டாதீர்கள். இதுதான் ஜீவகாருண்யம்..." - மதுரை ஆதீனம்

"உணவுக்கு காய்கறிகளை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டால் அது நடக்காத காரியம். சைவ உணவு என்பது பல இடங்களில் மாறுபடுகிறது. வங்காளத்தில் பிராமண ஓட்டலுக்குச் சென் றால் அங்கே சைவ உணவு விடுதியில் மீன் இருக்கும். மீன் அங்கே சைவம். ஆதீனம் கொல்கட்டாவிற்குப் போய் பார்க்க வேண்டும். இல்லையேல் அவரை நான் அழைத்து போகிறேன். திருமாவளவன் சைவம் என்பது ஆதீனம் மூலம் தான் தெரிந்தது. சிறுத்தைகள் சைவமாக இருக்கக் கூடாது. கூண்டில் உள்ள சிறுத்தைகள், புலிகள், சிங்கங்களுக்கு சைவ உணவு கொடுக்க முடியாது..." - தி.க., வீரமணி.
( செய்தி: தினமலர் )

முன்பு நான் இதை பற்றி எழுதிய பதிவு : 'நான்' வெஜிடேரியன்!

2 Comments:

மஞ்சமாக்கான் said...

டோண்டு போன்ற மட்ட(ன்)மான பாப்பான்கள் இன்றைக்கும் மீனை யாருக்கும் தெரியாமல் மதுரை முனியாண்டி விலாசில் சாப்பிடுகின்றனர். ஏற்கெனவே முட்டையை சைவம் என்ற வித்தியாசமான இழிபிறவிகள் அவர்கள்.

தலித்தாக இருப்பினும் சைவம் சாப்பிடும் திருமாவுக்கு எனது வீர வணக்கம்.

G.Ragavan said...

இப்ப என்ன சைவம் சாப்புடுறது நல்லதுங்குறீங்களா...கெட்டதுங்குறீங்களா....

நல்லதுன்னா....ஆதீனம் சொல்றது சரி. வீரமணி சொல்றது அபத்தம். எங்களையெல்லாம் இப்பிடித் திட்டக்கூடாது. நமக்கெல்லாம் அடிக்கடி கவுச்சி தேவைப்படுதே.

கெட்டதுன்னா.....ஆதினம் சொல்றதும் தப்பு. திருமாவளவன் செய்றதும் கெட்டது. (அப்ப நான் நல்லவன். ஹி ஹி ஹி)

உணவுப்பழக்கம் மிகவும் வேறுபடும். ஒருவரையொருவர் அனுசரித்துப் போவதே நல்லது. யார் எதைத் தின்றால் யாருக்கென்ன!

வீரமணியின் கருத்திலும் தவறுண்டு. கொல்கொத்தாவில் எந்த ஓட்டலுக்குப் போனாலும் மீன், ஆடு கோழி கிடைக்கும். பிராமண ஓட்டல் என்பதே அங்கு கிடையாது.

மேலும் அங்கு வெஜிடேரியன் என்ற கான்செப்ட்டே கிடையாது. அப்படியிருக்க கொல்கத்தா பிராமணர்கள் மீன் மட்டும் சாப்பிடுவார்கள் என்று சொல்வது மிக அபத்தம். மீன் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். மேலும் நான் கொல்கொத்தாவில் பிராமணத் திருமணத்திற்கே போயிருக்கிறேன். அங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் இருந்தது. அனைத்தையும் ஒரு கை பார்த்தேன்.

ஆனாலும் இந்த இட்லி சரியா வேகலை. வடைல கூட ரொம்ப எண்ணெய். அடுத்த ஈடாவது கூட கொஞ்சம் ஆவி வையுங்க.