பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 17, 2006

பழையன கழிதலும் புதியன புகுதலும்

Image hosted by Photobucket.com Image hosted by Photobucket.comபா.மா.காவில் இருந்து மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துள்ளனர். கடந்த வாரம் அந்தியூர் (தனி) எம்.எல்.ஏ. எஸ்.ஆர். கிருஷ்ணன் பா.ம.க.வில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்தார். இப்போது மேலும் இருவர் விலகியுள்ளனர். வந்தவாசி தனி தொகுதியில் வெற்றி பெற்ற முருகவேல்ராஜன், தாராபுரம் தனி தொகுதியில் வெற்றி பெற்ற சிவகாமி வின்சென்ட் ஆகியோர் தங்களது ராஜிநாமா கடிதங்களை சட்டப் பேரவைத் தலைவர் கா. காளிமுத்துவிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, சட்டப் பேரவையில் பா.ம.க.வின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது. மேலும், சட்டப் பேரவையில் 3 உறுப்பினர் பதவிகள் காலியாகியுள்ளன.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தமிழ் பண்டிகையை நன்றாக கொண்டாடுகிறது பா.மா.க!.

2 Comments:

ENNAR said...

வரும் சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு சீட் கிடைக்காது!! என இருக்கலாம். அதான் அம்மாவிடம் போனால் தலித் எழில் மலைக்கு கிடைத்தது போல் தங்களுக்கும் சீட் கிடைக்கும் என சென்றிருக்கலாம்.
அவர்கள் தான் அரசியல் வாதிகள். சமத்தர்கள்.

IdlyVadai said...

ennar - இருக்கலாம்.
இந்த இருவருமே கடந்த சில ஆண்டுகளாக பா.ம.க.வில் தனித்து செயல்பட்டு வந்தனர். சட்டப் பேரவையில் பா.ம.க. வெளிநடப்பு செய்யும்போது இவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். கட்சிக் கட்டளைக்குக் கட்டுப்படவில்லை என்று கூறி, இவர்களுடைய எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்குமாறு கோரி 3 ஆண்டுகளுக்கு முன்பு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, சட்டப் பேரவைத் தலைவர் காளிமுத்துவிடம் மனு கொடுத்தார்.

அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.