காலையில் என் 'கன்னி' ராசிக்கு என்ன பலன் என்று படித்தபோது "ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உங்கள் பதிவுக்குப் பக்கத்தில் தமிழ்மணத்தில் பச்சை விளக்கு எரியும். (பச்சையாக எழுதினால் சிகப்பு விளக்கு) இதனால் தமிழ்மணம் நிஜமாகவே மணக்க போகிறது. உங்களுக்குத் தொல்லை தந்த எதிரிகள் இன்றோடு ஒழிந்தார்கள்...." என்று படித்து திடுக்கிட்டு என் பக்கத்தில் உள்ள ரேடியோவை ஆன் செய்தால் "சற்று முன் ஆன் செய்த 'இட்லிவடை'க்கு பிடித்த பாடல் என்று அறிவித்து 'பச்சை நிறமே பச்சை நிறமே" என்ற பாடல் முழுவதும் நடுவில் விளம்பரங்கள் இல்லாமல் ஒலிபரப்பினார்கள். நிஜமாகவே ரேடியோ மிர்ச்சி - செம்ம ஹாட்டு மச்சி! சரி என்னதான் தமிழ்மணத்தில் நடக்கிறது என்று போய்ப் பார்த்தால் 'இட்லிவடை'க்கு பக்கத்தில் நிஜமாகவே 'பச்சை விளக்கு'. ஆகா! இன்று ஜென்ம சாபல்யம் அடைந்த நான், ராசிபலனையும் நம்ப ஆரம்பித்தேன்.
சரி இப்போது விஷயத்திற்கு வரலாம். வளவள என்று எழுதாமல் ஒரு டாப் டென்:
1. சில மாதம் முன்னால் பத்ரி அவர்கள் தமிழ்மணத்தின் எதிர்காலம் என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் தமிழ் மணம் 1000 பதிவுகளைத் தொட்டால் ஷாக்கடித்து பலர் துடிப்பார்கள் என்றார். இன்று 700 பதிவுகளுக்கே பலர் ஷாக்கடித்து அவதிப்படுகிறாகள்.
2. தமிழ்மணம் ஒரு திரட்டி, குப்பை போல் எல்லாம் இருக்க வேண்டும். அது தான் அதற்கு அழகு. கோழி எப்படி குப்பையிலிருந்து தனக்கு வேண்டிய குப்பையைப் பொறுக்கி எடுத்து சாப்பிடுமோ அதே போல் தமிழ் அறிஞர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்வார்கள். இதை மாடரேட் செய்வதற்கு பதில் சலூனுக்கு சென்று தலை மயிர் வெட்டிக்கொள்ளும் உபயோகமான வேலை இருந்தால் செய்யலாம்.
3. மூன்று மாதம் எழுதாத பதிவை பட்டியலிலிருந்து நிக்கிவிடுவதற்கு காசிக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை ஒரு வாக்கெடுப்பு நடத்தி பிறகு நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அட்லீஸ்டு ஜனனாயக முறை என்று ஜல்லி அடித்திருக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகம் 'ஆஹா' என்று பாராட்டியிருப்பார்கள்.
4. தமிழ்மணத்தின் சுட்டி தமிழ்மணம் திரட்டும் எல்லா வலைப்பதிவிலும் இருக்க வேண்டும் என்று காசி கூறியிருக்கிறார். விரைவில் கட்டாயமாகப்படும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்மணம் காசியுடையது, அப்படிச் சொல்ல காசிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதே போல் வலைப்பதிவு வைத்திருப்பவருக்கும் அவர் தன் வலைப்பதிவில் சுட்டி கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய அதிகாரம் இருக்கிறது. உதாரணத்திற்கு ( பி.கே.சிவகுமார் போல் ) வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் எல்லோரும் தமிழ் மணத்திலிருந்து வேளியே வந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், தமிழ்மணம் நாறிவிடும். அல்லது தமிழ்மணத்திற்கு தேவையே இருக்காது.
5. "தற்போது தமிழ்மணம் ஒரு monopoly போல் திகழ்கிறது; சர்வாதிகாரம்; பேச்சுரிமை கிடையாதா? என்ன ஒரு கொடுமை!" என்று எல்லோரும் எழுதிவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தமிழ்மணம் இவர்கள் யாரையும் எழுதாதே என்று சொல்லவில்லை. 'தமிழ்மணத்தில் உங்களுக்கு இடம் கிடையாது, சாரி!' என்று சொல்லிவிட்டது; அவ்வளவு தான். இதற்கு காசிதான் வருத்தப்பட வேண்டுமே தவிர நீங்கள் கிடையாது. மாறாக நீங்கள் நன்றாக எழுதி, என் பதிவை தமிழ்மணம் திரட்ட வேண்டும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்/ சொல்ல ஆரம்பியுங்கள்.
6. தமிழ்மணத்திற்குப் போட்டியாக இன்னொரு வலை திரட்டி வந்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீரங்கத்து மாமி கருத்து தெரிவித்துவிட்டார். அப்படி எது வந்தாலும் பாலியல், குஷ்பு, செருப்பு, சாணி, மதம், ஜாதி( குறிப்பாக பார்பனியம், தலித்), விடுதலைப்புலி (ஆதரவு, எதிர்ப்பு) என்று தனி நபர் தாக்குதல் இல்லாம் தமிழ் வலைப்பதிவு இருக்காது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யலாம்.
7. தமிழ் மணம் தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு Yellow pages போன்ற ஒன்று. அதற்கு மேல் அது செயல் பட்டால் அது இன்னொரு மரத்தடி/ராயர் போல் ஆகிவிடும். அதற்கான அறிகுறிகள் தான் இந்த மாதிரிப் பிரச்சனைகள்.
8. கிட்டத்தட்ட ஐம்பது ஓட்டு வந்திருக்கிறது. ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றிகள். முடிந்தால் இந்திய ஜனாதிபதிக்கு இந்த முடிவை அனுப்புகிறேன்.
9. 'கோயிஞ்சாமிகள்' கூட்டம் இந்த மாதிரி நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதன்மூலம் தங்கள் நடுநிலமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.
10. நல்ல வலைப்பதிவுக்கு தமிழ்மணம் தேவையில்லை. அவை தமிழ்மணம் இல்லாமலும் கவனிக்கப்படும்.
[ முடிவுகள் ] 
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, October 21, 2005
தமிழ்மணம் டாப் 10
Posted by IdlyVadai at 10/21/2005 04:27:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

12 Comments:
இட்லிவடை,
பதிவுக்குச்சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி. நீங்களும் கன்னி ராசிக்காரரா?
ஆமாம்! இன்று கன்னி ராசி. நாளைக்கு என்ன என்று தெரியவில்லை.கும்பமாக கூட இருக்கலாம். அது அன்றைய ராசிபலனை பொருத்தது ;-)
// குமரேஸ் said...
"10. நல்ல வலைப்பதிவுக்கு தமிழ்மணம் தேவையில்லை. அவை தமிழ்மணம் இல்லாமலும் கவனிக்கப்படும்"
"சரி என்னதான் தமிழ்மணத்தில் நடக்கிறது என்று போய்ப் பார்த்தால் 'இட்லிவடை'க்கு பக்கத்தில் நிஜமாகவே 'பச்சை விளக்கு'. ஆகா! இன்று ஜென்ம சாபல்யம் அடைந்த நான்...."
எங்கேயோ இடிக்கிறதே
October 21, 2005 5:23 PM //
குமரேஸ். எங்கு இடிக்கிறது என்று சொன்னால் ஜண்டு பாம் வாங்கி அனுப்புகிறேன். ( நான் அதை தான் இவ்வளவு நாளா உபயோகிக்கிறேன் :-)
//9. 'கோயிஞ்சாமிகள்' கூட்டம் இந்த மாதிரி நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதன்மூலம் தங்கள் நடுநிலமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.//
:):)
Onnumae puriyalae ennomo nadakkuthu marmamaa irukkuthu
அசத்தலாய் எழுதி இருக்கிறீர்கள்
//'கோயிஞ்சாமிகள்' கூட்டம் இந்த மாதிரி நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதன்மூலம்
Nattukku nallathu thaane? :)
அப்படி போடு !!
5. "தற்போது தமிழ்மணம் ஒரு monopoly போல் திகழ்கிறது; சர்வாதிகாரம்; பேச்சுரிமை கிடையாதா? என்ன ஒரு கொடுமை!" என்று எல்லோரும் எழுதிவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தமிழ்மணம் இவர்கள் யாரையும் எழுதாதே என்று சொல்லவில்லை. 'தமிழ்மணத்தில் உங்களுக்கு இடம் கிடையாது, சாரி!' என்று சொல்லிவிட்டது; அவ்வளவு தான். இதற்கு காசிதான் வருத்தப்பட வேண்டுமே தவிர நீங்கள் கிடையாது. மாறாக நீங்கள் நன்றாக எழுதி, என் பதிவை தமிழ்மணம் திரட்ட வேண்டும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்/ சொல்ல ஆரம்பியுங்கள்.
ஆமா இந்த வாக்கெடுப்பு எப்ப நடத்துனீங்க... பார்க்கவே இல்ல! இப்ப போஸ்டல் ஓட்டு ஏதாவது உண்டா... இருந்தால் 22ஐ 23 ஆக்கிடுங்க:)
அடப்பாவி கஸ்டப்பட்டு மேற்கொளெல்லாம் காட்டி சொல்லவந்தத சொல்லாம விட்டுடுட்டேன்:
5. "தற்போது தமிழ்மணம் ஒரு monopoly போல் திகழ்கிறது; சர்வாதிகாரம்; பேச்சுரிமை கிடையாதா? என்ன ஒரு கொடுமை!" என்று எல்லோரும் எழுதிவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தமிழ்மணம் இவர்கள் யாரையும் எழுதாதே என்று சொல்லவில்லை. 'தமிழ்மணத்தில் உங்களுக்கு இடம் கிடையாது, சாரி!' என்று சொல்லிவிட்டது; அவ்வளவு தான். இதற்கு காசிதான் வருத்தப்பட வேண்டுமே தவிர நீங்கள் கிடையாது. மாறாக நீங்கள் நன்றாக எழுதி, என் பதிவை தமிழ்மணம் திரட்ட வேண்டும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்/ சொல்ல ஆரம்பியுங்கள்.
சூப்பர் கலக்கல்....!
அன்பு,
நீங்கள் அட்லீஸ்ட் ஒரு ஐந்து கள்ள ஓட்டாவது போடுவீர்கள் என்று நினைத்தேன்!. போடவில்லையா ?
நான் எழுதும் முன் ஒரு வாக்கெடுப்பு நடத்தினேன். முடிவை பொருத்து என் கருத்தை எழுதலாம் என்று ;-)
http://idlyvadai.blogspot.com/2005/10/blog-post_19.html
எது நடந்ததோ அது நல்லபடியாகவே நடந்தது. காலமே பதில் சொல்லிவிட்டது.
Post a Comment