பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 01, 2005

அந்நியன் - ஒரே கேள்வி

நேற்று அந்நியன் படத்தை சத்தியம் தியேட்டரில் பார்த்தேன். நல்ல கூட்டம். படம் பார்த்த பிறகு ஷங்கரின் சமுதாய அக்கரையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனக்கு இந்த படத்தை பார்த்தவுடன் 'பாஸ்' பற்றி ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது.

இந்தியன் தாத்தா, முதல்வன் அர்ஜுன், அம்பி விக்கிரம் என்று படங்களில் நேர்மை, லஞ்சம் ஒழிப்பு, போன்றவற்றை வலியுறுத்தும் நீங்கள் ஏன் பாஸ் படப்பெட்டியை தூக்கிக்கொண்டு சென்சார் சான்றிதழ் வாங்க ஆந்திரா போனீர்கள் ? தமிழ் நாட்டு சென்சார் அதிகாரிகளிடம் பாய்ஸ் பட டிரைலரில் ஏழு கட் வாங்கிய பயமா ? அல்லது உங்களுக்கும் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியா ?

7 Comments:

அப்டிப்போடு... said...

அட அதெல்லாம் வியாபாரத் தந்திரம்னு கூசாம சொல்லிருவாரு நீங்க வேற., நேர்மை., நாணயம்... ஒட்டுமொத்தமா எல்லா அரசு ஊழியர்களும்., அரசு அலுவகங்களும் மட்டும்தான் உழலின் ஊற்றுக் கண்கள். மத்தபடி அரைகுறை உடையில் 'ரெமோ'ன்னு காட்டுக் கத்தற மாதிரி எடுக்குறவங்களையெல்லாம் யாரும் எண்ணைச் சட்டியில போட்டு பொறித்துவிடாதீர்கள்!. இயக்குனர் சிகரம் படம் பூராம் சீறிப்பாயுற விடயம் அலட்சியம். ஆனா கடைசில அன்னியன் வாடகைக்கிருக்கிற அம்பிய அலட்சியமா அலைய விட்டுட்டாரு!., இதுக்கு என்னா தண்டணை? அந்தப் புருடா புரணத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்து சொல்லுங்க யாராவது.

Muthu said...

இட்லி,
சினிமால இதெல்லாம் சகஜம்ங்க.. வாழ்க்கையிலும்தான்.

ஊருக்குத்தான் உபதேசம் :-).

Anonymous said...

ஐயா இட்லிவடை,

பாஸ் படத்தில் அதற்கு தான் "Break the rules" என்று பாட்டு இருக்கு. கேட்கவில்லையா ?

Agent 8860336 ஞான்ஸ் said...

ஒரே கேள்வி:

ஏன் பாஸ் படப்பெட்டியை தூக்கிக்கொண்டு சென்சார் சான்றிதழ் வாங்க ஆந்திரா போனீர்கள் ?


ஒரே பதில்:

ஆந்திரா சென்றது தயாரிப்பாளர் எடுத்த முடிவு!


- ஞானபீடம்.

Suresh babu said...

பாய்ஸ் படம் எடுக்கும்போது அப்படி இருந்த சங்கர் அன்னியன் படம் எடுத்த பின்னர் திருந்திவிட்டார் என்று வைத்துக்கொள்ளலாமே !!!!

-சுரேஷ்.

Adaengappa !! said...

அடேங்கப்பா !!Good question !!

சீனு said...

//பாய்ஸ் படம் எடுக்கும்போது அப்படி இருந்த சங்கர் அன்னியன் படம் எடுத்த பின்னர் திருந்திவிட்டார் என்று வைத்துக்கொள்ளலாமே !!!! //

அப்புறம் ஏன் சார் வருமான வரி சோதனையில் மாட்டினார்?