பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 13, 2005

ஆபாசம் டாப் 10

இன்று இந்த தலைப்பில் எழுதவில்லை என்றால் நான் தமிழ் வலைப்பதிவு வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று என்னை யாரும் நம்பமாட்டார்கள். கருட புராணம் படி நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டும் நான் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

1. திராவிடக் கட்சியை குறை கூறிக்கொண்டிருந்த தமிழ் வலைப்பதிவுகள், தாங்கள் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். திமுக/ஆதிமுக மாநாட்டு பேச்சுகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு தெரியவில்லை.

2. கடந்த வாரம் ( தற்போது லேட்டஸ்ட் கூடும் இடமான)டிரைவின் உட்லாண்ட்ஸில் ஆபாச பின்னூட்டங்களை பற்றி பேசி எல்லோரும் கலக்கியிருக்கிறார்கள், சாம்பார் இட்லியை . அதன் பின் வீட்டுக்கு வந்து நிதானமாக தங்கள் சண்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

3. ஆராய்ந்தால் முதலில் "செருப்பில்" ஆரம்பித்த இந்த ஆபாசம், பின் சானி, "பீ அள்ளுங்கடா", "சிம்புவின் -- வெட்டுதல்", "'பாப்பார' லாஜிக்", "சு, பு, "%@*&" என்று வளர்ந்து இன்று சாம்பார் இட்லியுடன் பேசப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இவர்களை திருத்த முடியுமா ? முடியாது. இவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை அவர்கள் பெற்றோர்கள் கற்பித்திருக்க வேண்டும். தவறியதால் வந்த விணை. இணையத்தில் இதை எல்லாம் தடுக்க முடியுமா என்றால் முடியாது. 360, நல்ல நம்பர் அவ்வ்ளவுதான். தமிழ்மணம், பிளாகரின் வரையரை புரியாமல் பலர் இன்று பினாத்திக்கொண்டு, சாரி டிஸ்கஸ் செய்வது அதைவிட ஆபாசம்.

4. வேடிக்கை என்னவென்றால் நாம் குமுதம், பாய்ஸ்... ஆபாசம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

5. வெளிநாட்டுல் இருந்துக்கொண்டு தலித்தியம், பார்பனிஸம் பேசிக்கொண்டிருப்பது ஆபாசத்தின் உச்சம்.

6. சகிப்புத்தன்மை என்பது கடுகளவு கூட நம்மில் பலருக்கு கிடையாது, வலைப்பதிவு, குழுமங்கள்ளிருந்து விலகுவதும் பின் வருவதும் நாம் தினமும் பார்க்கும் மற்றொரு ஆபாசம்.

7. கருத்துக்கும் வம்புக்கும் வித்யாசம் தெரியாமல் விவாதிப்பது ஆபாசமோ ஆபாசம்.

8. வலைப்பதிவில் கருத்து தெரிவித்தால் எல்லோரும் சிந்தித்து மாறுவார்கள் என்று நினைப்பது மற்றொரு ஆபாசம்.

9. சர்ச்சைக்குரிய பதிவுக்கும் முக்கியத்துவம் தேவையான பதிவுக்கும் வித்யாசம் தெரியாமல் +/- குத்துவது இன்னொரு ஆபாசம். பின்னூட்டங்களை தமிழ்மணம் முகப்பிலிருந்து எடுக்க சொல்வது மெகா ஆபாசம்.

10. கடைசியில் இதை தடுக்க சுலபமான மூன்று வழிகள்
- இதை பற்றி மேலும் விவாதிக்காமல் இருப்பது.
- தமிழ் வலைப்பதிவை மூடிவிட்டு ஆங்கில வலைப்பதிவை ஆரம்பிப்பது.
- இவையாவும் முடியாவிட்டால், நெட்வர்க் கேபிளை புடுங்கிப்போடுவது.

16 Comments:

மாயவரத்தான்... said...

Super

கொங்கு ராசா said...

நான் இதை வழிமொழிகிறேன்..!!

KVR said...

//சகிப்புத்தண்ணமை//

இது என்னங்கண்ணே, தமிளு டிஸ்னரில புச்சா சேத்தாங்களா?

சுதர்சன் said...

என்ன பிரச்சினை உங்களுக்கு? அது ஆபாசம், இது ஆபாசம் என்று சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறீர்களே?

ROSAVASANTH said...

நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் போதெல்லாம், அதை உண்மையிலேயே தடுப்பதிலும், குறைந்த பட்சம் இது போன்ற நிகழ்வுகளை தடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், பத்ரி போல, வெங்கட் போல, சாம்ஸ்கி போல (ரோஸா எழுதாத ஆனால் எழுதியிருக்கக் கூடியது போல) பதிவுகள் எழுதுவார்கள். அதை பயங்கரவாதத்தை நியாயபடுத்துவதாய் நடுத்தரவர்க்க வன்முறை முன்மொழியும். அது பொதுமனத்துக்கு உவப்பானதாகவும் இருக்கும். அது ஒரு பொதுமனத்தின் தர்க்கத்தில் அடங்குவதாகவும் இருப்பதால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. மன்னிக்கவும் முடியும். ஆனால் ஒரு பயங்கரவாத அரசாங்கம் மற்றும் அதன் தரகர்கள் வியாபாரிகள் இந்த வெடிகுண்டு நிகழ்வை எப்படி தனக்கு சாதகமாய் பயன்படுத்தலாம், இதை முன்வைத்து இன்னும் தன் ஆக்ரமிப்பையும் அராஜகத்தையும் நியாயப்படுத்தலாம் என்று யோசிக்கும். அந்த வெடிகுண்டு நிகழ்வே தனது செயல்களின் பக்கவிளைவு என்பதை மறைத்து, அந்த வெடிகுண்டு நிகழ்வையே தனது மற்ற செயல்களுக்கு மூலதனமாக்கும். இட்லி வடை செய்வதும், எழுதியதையும் எல்லோருக்குமே அவரவர் பார்வையில் நிச்சயமாய் புரிந்துகொள்ள முடியும்.

ஆள்தோட்டபூபதி said...

சும்மா கும்முனு சொன்ன நயினா

enRenRum-anbudan.BALA said...

இட்லி,
நல்லா அடிச்சு ஆடியிருக்கீங்க !

But, I do not agree with your views entirely or Rozavasanth's harsh comparison of your attempt !!!

Go.Ganesh said...

// இதை பற்றி மேலும் விவாதிக்காமல் இருப்பது. //

ஆமோதிக்கிறேன்

Eswar said...

//தமிழ் வலைப்பதிவை மூடிவிட்டு ஆங்கில வலைப்பதிவை ஆரம்பிப்பது.//

I doing this.

//வெளிநாட்டுல் இருந்துக்கொண்டு தலித்தியம், பார்பனிஸம் பேசிக்கொண்டிருப்பது ஆபாசத்தின் உச்சம். //

எப்படி ஜயா நீர் கண்டுபிடித்தீர். உளவு படை எதாவது? அப்ப இலண்டன் விவாகரத்த சுமார முடிச்சு குடும்.

ஈழநாதன்(Eelanathan) said...

மூன்றாவதா ஒன்று சொன்னீர்களே அது சரியான வழிமுறை

G.Ragavan said...

என்றைக்குமே என்ன நல்லது செய்து அல்லது நீக்க வேண்டும் என்று யோசித்துச் செயலாற்ற வேண்டும். குற்றங்களை எடுத்துச் சொல்வதற்கும், அடுத்தவர் மீது புழுதி வாரித் தூற்றுவதற்கும் வேறுபாடு உள்ளது. இதை எல்லாரும் செய்து கொண்டிருக்கிறார்கள். என்றைக்காவது குறைகளையும் நாகரீகமாக சுட்டிக் காட்டும் வழக்கம் வளருமோ!

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலோ கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய வலைப்பூவே!

Arun said...

Well said.

மித்ரா said...

Superb !

மாயவரத்தான்... said...

வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!

test said...

//வலைப்பதிவில் கருத்து தெரிவித்தால் எல்லோரும் சிந்தித்து மாறுவார்கள் என்று நினைப்பது மற்றொரு ஆபாசம்//

//சகிப்புத்தன்மை என்பது கடுகளவு கூட நம்மில் பலருக்கு கிடையாது//

S U P E R B ! ! !

vathilai murali said...

நல்ல கருத்து இதுவும் சிறு பத்திரிக்கை உலகம் போல ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது