பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 08, 2005

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா ? என்ற கேள்வி பல வருடங்களாக கேட்கப்பட்டு வருகிறது. முன்பு நாசா ஸ்பிரிட், சூப்பர் சானிட்டி என்ற 2 ரோபோ விண்கலங்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது பலருக்கு நினைவிருக்கலாம். இந்த விண்கலம் முதலில் செவ்வாய் கிரகம் பற்றிய கறுப்பு- வெள்ளை புகைபடங்களை பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?. அங்கு தண்ணீர் ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ராட்சத ஆறுகள் ஓடியிருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஆற்றுப்படுகை பள்ளத்தில் தான் ஸ்பிரிட் விண்கலம் தரையிறக்கப்பட்டது. அதன் படத்தை இங்கு காணலாம்.

இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 3 விண்கலங்கள் நடத்திய ஆராய்ச்சியில் அந்த கிரகத்தில் தண்ணீர் உருவாக தேவையான ஹெமிடைட் என்ற தனிமம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

தற்போது விண்கலத்திலிருந்து வந்துள்ள படத்தை பார்த்தால் இந்த கூற்று மிக உண்மை என்பது புலப்படும். ஆக நாளுக்கு நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன் னேற்றம் நிகழ்ந்து வருவது மனிதகுலத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

லேட்டஸ்ட் படத்தை இங்கு பார்க்கலாம்.

3 Comments:

அல்வாசிட்டி.விஜய் said...

//செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்//

படத்தை பார்த்த கிடைக்கிற தண்ணீர் நாட்டுச்சரக்கு மாதிரி இருக்கும் போலியே.. சென்னை சாக்கடை கலக்காமல் இவ்ளோ ப்யூரா இருக்கு தண்ணி. கண்டிப்பா நாட்டுச்சரக்கு தான்.

எச்சரிக்கை: கொடுக்கிற டார்ச்சருக்கு அளவேயில்லையா

:-)))

Moorthi said...

இன்னும் கொஞ்சநாள் போனால் அங்கு இட்லி வடையும் கிடைக்குமாம்!!! அறியந் தந்தமைக்கு நன்றி இட்லியண்ணா.

Agent 8860336 ஞான்ஸ் said...

நீர் இன்றி அமையாது

உலகு மட்டுமல்ல

செவ்வாயும் கூட !