பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 12, 2005

பழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

பழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு !

உங்களிடம் பழைய செல்போன் இருக்கிறதா ? அதை கேமாராவுடன் கூடிய செல்போனாக மாற்ற வேண்டுமா ? கவலையை விடுங்கள். வழிமுறை மிக சுலபம். செலவும் ரொம்ப ஆகாது.
இந்த வினோதமான தொழில்நுட்பம் என்னை பெரிதும் வியப்பிலாழ்த்தியது. நான் என்னுடைய செல்போனை மாற்றிவிட்டேன் அப்ப நீங்க ?


வழிமுறைக்கு இந்த link'கை கிளிக் செய்யவும்.

பி.கு - 1: இது நோக்கியா செல்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான்.
பி.கு - 1.5: ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

9 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

i couldnt open your link. (site blocked in Emrates)

give me some other link ONLY IF IT IS NOT A HOAX.

பழைய செல்போன் வைத்திருக்கும் ஏழை said...

ஐயா இட்லி வடை, உங்க லின்க் துபாய்ல தடை செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் விவரமாத்தான் எழுதிடுங்களேன்.

Idly Vadai said...

நான் என்ன பண்ண முடியும். உங்களுக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.
என்னை வாழ்த்தி 3 ஈ-மெயில் இதுவரை வந்துவிட்டது.

Anonymous said...

இட்லி, மிக்க நன்றி. என்னுடைய ஐந்தாயிரம் பெறுமான செல்பேசியை பதினைந்தாயிரம் மதிப்புள்ளதாய் மாற்றிவிட்டேன். அவ்வப் பொழுது என் போன்ற ஏழைகளின் நலனுக்கு ஏதாவது செய்து இம்மையிலும், மறுமையிலும் புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்.
மீண்டும் நன்றி, நன்றி, நன்றி!
இப்படிக்கு,
பொல்லா பிள்ளையார்

சு. க்ருபா ஷங்கர் said...

என் செல்பேசியில் காமிரா ஏற்கனவே இருக்கிறது.

அதனால், கேமரா இணைந்திருக்கும் செல்பேசியில் இருந்து கேமராவை நீக்க என்ன செய்யவேண்டும்? வீட்டில் உள்ள சாதாரண தொலைபேசியை உபயோகித்துக்கொள்ளலாமா?

Haranprasanna said...

:)))))))))))

Anonymous said...

The photo shows a Nokia phone tied with a rubber band with a camera that boldly says "Kiev" in it.

மாயவரத்தான்... said...

'பலான' எடத்திலே இடி விழ!

Muthu said...

இட்லிவடியோட ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா :-).