பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 06, 2005

அட மறுபடியும் கூகிள் !

Make everything as simple as possible, but not simpler
Albert Einstein
Google Web Accelerator(GWA) என்ற கூகிள் ஒரு புதிய சேவையை அறிமுக படுத்தியுள்ளது. ஏதோ இலவசமாக கிடைக்கிறது என்று உடனே இறக்கிவிடாதீர்கள் பொறுங்கள். இதனால் என்ன பயண் என்பதை முதலில் பார்க்கலாம்.

நீங்கள் தேடிய பக்கத்தின் URLலை கிளிக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
உங்களுடைய விண்ணப்பம்(request) நீங்கள் தேர்ந்தெடுத்த ISPயை சென்றடைகிறது, பிறகு உங்கள் ISP நீங்கள் கேட்ட வலைத்தளத்தை உங்களுக்கு அனுப்புகிறது. இதனை கீழ் காணும் படத்தில் காணலாம்.


இப்போது GWAயை நீங்கள் நிறுவி(Install)பின் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். நீங்கள் விரும்பிய பக்கத்தை கிளிக் செய்கிறீர்கள். உங்கள் விண்ணப்பம் உங்கள் ISPயை சென்றடைகிறது. பிறகு அங்கிருந்து Googleக்கு செல்கிறது. Goolge தன்னுடைய சேமிப்புகிடங்கிலிருந்து அதை உங்களுக்கு தருகிறது, நீங்கள் கேட்ட பக்கம் இல்லை என்றால் அந்த பக்கத்தை அந்த வலைத்தளத்திலிருந்து எடுத்து அனுப்புகிறது(Dotted lines). இதை கீழ் காணும் படம் விளக்குகிறது.இப்போழுது நான் என்னுடைய Browserலிருந்து http://idlyvadai.blogspot.com என்று விண்ணப்பித்து, என்னுடைய Web counter logல் பார்த்தால் ISPயின் பெயர் log செய்யப்பட்டிருக்கும்.

GWA நிறுவிய பின் http://idlyvadai.blogspot.com விண்ணப்பித்தால், Web counter logல் Google Inc, United States என்று log செய்யப்படும்.

ஆக சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் GWA ஒரு இலவச anonymizer(proxy)(முகமூடி?) ஆக வேலை செய்கிறது. இது privacy intrusionனா என்றால் ஆமாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

இந்த வசதியால் நீங்கள் சில நிமிடங்கள் சேமிக்கலாம்.(உங்கள் cacheலிருந்து வருவதற்கும் இணையதளத்திலிருந்து வருவதற்கும் உள்ள வித்தியாசம் போல் தான் இதுவும்).

வெங்கட் இதை தன்னுடைய கணினியில் நிறுவி இரண்டு நிமிடம் சேமித்துவிட்டதாக சொல்லியிருக்கார். நீங்கள் இதை நிறுவும் முன் இரண்டு நிமிடம் யோசிக்கவும்.

4 Comments:

Voice on Wings said...

//ஆக சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் GWA ஒரு இலவச anonymizer(proxy)(முகமூடி?) ஆக வேலை செய்கிறது. இது privacy intrusionனா என்றால் ஆமாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.//

privacy intrusion என்று ஏன் கூறுகிறீர்கள்? உங்கள் அடையாளம் (IP address, ISP name etc.) பலவிதமான வலைதளங்களின் பார்வையிலிருந்து மறைக்கப் படுவதால், உங்கள் privacy இன்னும் வலுவடைகிறது என்றே கூறுவேன். ஆனால், Google உங்களைக் கண்காணிக்க முற்படும் பட்சத்தில் கொஞ்சம் ஆபத்துதான்.

பதிவுக்குத் தொடர்பில்லாத இன்னொன்று - உங்கள் 'post comment' சுட்டிகள் முகப்பிலிருந்து மட்டுமே தென்படுகின்றன. 'permalink'களில் தென்படுவதில்லை. Pls do the needful ;-)

Idly Vadai said...

Voice on Wings,
செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி!.

அன்பு said...

ஏதோ இலவசமாக கிடைக்கிறது என்று உடனே இறக்கிவிடாதீர்கள் பொறுங்கள்.

நல்லவேளை இறக்கப்பார்த்தேன்:)

Anonymous said...

You might want to point out their blunders too.

http://37signals.com/svn/archives2/google_web_accelerator_hey_not_so_fast_an_alert_for_web_app_designers.php