காசி அவர்கள் "தமிழ்க்கணிமை முன்னேற்றத்துக்கு அரசின் ஆணை" என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதற்கு நிறைய பேர் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள். நல்லது.
சமீபத்தில் தயாநிதி மாறன் அவர்கள் வெளியிட்ட (C-DAC)குறுந்தகட்டை சிறுவர்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். அந்த கூட்டத்தில் எனக்கும் ஒரு குறுந்'தட்டு' கிடைத்தது. அதில் வந்துள்ள மென்பொருட்களை பற்றி பத்ரி அலசியுள்ளார். பயன் படக்கூடியது என்று எனக்கு தோன்றியது - பொன்விழி (optical character recognition) மட்டும் தான். அதில் உள்ள spell checker நீ ஓசியிலதான வாங்கின என்று சிரிக்கிறது.
மற்றபடி நிறைய TAM, TAB ஃபாண்ட்ஸ் கிடைக்கிறது. வீட்டில் உள்ள ஷோகேஸில் வைக்கலாம். குறுந்தகட்டில் உள்ள மென்பொருட்கள் எதுவுமே Unicode சார்ந்தது கிடையாது.
அரசியல்வாதிகள் இது பற்றியெல்லாம் என்றுதான் கவனிப்பார்களோ தெரியவில்லை. கருத்துரு பற்றிய கவலை எழுத்துருவுக்கும் இருந்தால் புண்ணியம். UNICODEக்கு அடுத்த தேர்தல் பிரச்சாரத்திலாவது குரல் கொடுக்க யாராவது ஒரு கட்சி தொடங்கினால் கட்சி மாநாட்டில் இட்லிவடை இலவசமாக வழங்கப்படும்.
இன்று 'லதா Font' பிரபலம் அடைந்ததற்கு காரணம் அது 'மைக்கிரோசாப்ட் விண்டோஸுடன்' வந்தது தான். கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. இது வரை எவ்வளவோ தமிழ் மாநாடுகள் நடந்திருக்கின்றன. செவ்வாய் க்ரகத்தில் அடுத்த மாநாடு நடக்கும் சாத்தியம் அதிகம். இதுவரை அதில் எதுவும் சாதிக்கவில்லை, எதையும் அவர்களால் standardise செய்ய முடியவில்லை. வருடாவருடம் வரும் ஒரு சடங்காக ஆகிவிட்டது. அதற்கு பதில் வீட்டில் வடாகம் பிழியலாம்.
நாளை ஒரு நல்ல மென்பொருள் தமிழுக்கு வர வேண்டும் என்றால் அது மைக்கிரோஃசாப்ட் கொண்டுவந்தால் தான் முடியும். ஓபன் ஆபிஸ் எல்லாம் தமிழர்களுக்கு ஒத்து வராது என்று எனக்கு தோன்றுகிறது.
இன்னும் ஒர் 5 ஆண்டுகளில் மைக்கிரோசாப்ட் நிறுவனம் தமிழுக்கு ஏதாவது ஒரு சில நல்ல மென்பொருட்களை கொண்டுவந்தால் சந்தோஷப்படலாம். என்று suratha.comக்கு வேலை இல்லையோ அன்று தான் நமக்கு விடிவு காலம். மற்ற மென்பொருட்கள் .. அடுத்த போகிவரை காத்திருக்கவும்.

பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 25, 2005
எழுத்துரு பற்றிய கருத்துரு
Posted by IdlyVadai at 4/25/2005 02:06:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இப்படியா பட்டப்பகலில் வெட்டவெளிச்சமாக மைக்ரோசாஃப்ட் பற்றி பாசிடிவாகச் சொல்வது? ப்ரச்சனையை விலை கொடுத்து வாங்க ஏதாவது கங்கனமா? உங்களுக்கு நேரம் சரியில்லை. :-))
//இன்று 'லதா Font' பிரபலம் அடைந்ததற்கு காரணம் அது 'மைக்கிரோசாப்ட் விண்டோஸுடன்' வந்தது தான். கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. //
200% UNMAI. Everyone will (must?) accept this.
Nice Posting.. Keep it up.
Post a Comment