பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 20, 2005

தமிழ் எழுத்துக்களின் சுடுகாடு (அல்லது ) வலைப்பதிவு.

குதிரைக்கு சராசரி ஆயுட் காலம் 20-25 வருடம்; நாய்க்கு 8-10 வருடம்; பன்னிக்கு 5-12 வருடம்; குப்பைக்கு கார்பரேஷன் லாரி வரும் வரை; வலைப்பதிவுக்கு தமிழ்மணத்தில் வந்து போகும் நேரம் ! அதன் பிறகு அது எழுத்துக்களின் சுடுகாடாகிறது. இந்த வரிசையில் தற்போது எவ்வளவோ பதிவுகள் எழுதப்பட்டு அவரவர் வழக்கபடி எரித்தோ புதைத்தோ ஆகிவிட்டன. சில பதிவுகள் தீடீர் என்று உயிர் பெற்று கொஞ்சம் டான்ஸ் ஆடும் அவ்வளவுதான்.

தமிழ் மணத்தில் இருக்கும் வலைப்பதிவின் பட்டியலை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இன்று தமிழில் மொத்தம் 476 வலைப்பதிவுகள் இருக்கிறது. எழுத ஆட்கள் இருக்கிறார்கள், படிக்க ? கிடையாது. பின்னூட்டங்கள் ஒரு மினி Yahoo Groups ஆகிவிட்டன. சில சமயம் அதைவிட மோசமாகவும்.

ஒரு வலைப்பதிவின் ஆயுட் காலத்தைக் கூட்ட இட்லிவடையின் டாப் 10

1. யாரும் எழுதாத போது எழுதலாம். தமிழ்மணத்தில் உங்கள் பதிவு ரொம்ப நேரம் காண்பிக்கப்படும். காசி தமிழ்மணத்தில் ராணி முத்து காலண்டர் ஸ்டைலில் எமகண்டம், ராகுகாலம் போட்டால் நல்லது.

2. கவனத்தை ஈர்க்கும் தலைப்பாக கொடுங்கள். உதாரணம்: "அய்யா, அம்மா யாராவது வாங்களேன்". என்று பிச்சைகாரன் ஸ்டைலில் டிரை பண்ணிப்பாருங்கள்.

3. மேதாவிதனமக எதாவது எழுதுங்கள். உதாரணம் : "பாலியலில் சமுகவியல்", "மகாவிஷ்ணு தான் டார்வின்" , "பஞ்சு மிட்டாயில் பார்பனியம்" என்பது போல். இதை டிஸ்கஸ் பண்ண படித்த கூட்டம் இருக்கிறது.

4. எழுதிவிட்டு உங்கள் நண்பர்களை பார்க்க சொல்லுங்கள், பிறகு ஓட்டு போட சொல்லுங்கள்.(கவனிக்கவும் - பார்க்க சொல்லுங்கள், படிக்க சொல்லாதீர்கள், படித்தால் உங்களுக்கு "-" வாக்குகள் நிச்சயம்), தப்பித்தவறி உங்கள் பதிவு தமிழ்மணம் டாப் 25யில் இடம்பெற்றது என்றால் அந்த வலைப்பதிவுக்கு ஆயுட் காலம் 7 நாட்கள். பிறகு உங்கள் சொந்த செலவில் பால்.

5. ஏதாவது வில்லங்கமாக எழுதிவிட்டு காத்திருங்கள். செருப்பு, சானி, மலம் என்று நாகரிகமான பின்னூட்டம் கொடுக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய மனது பண்ணி பின்னூட்டம் எதாவது கொடுத்தால் உங்கள் பதிவுக்கு அன்று பம்பர் பரிசுதான். சண்டை போட ஒரு கூட்டம், வேடிக்கை பார்க்க ஒரு பெரிய கூட்டம் என்று உங்கள் பதிவில் அன்று ஒரு திருவிழாதான்.

6. ஆராய்ச்சி கட்டுரை போல் ஏதாவது எழுதுங்கள். "ரஜினியின் அடுத்த படம்","ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? என்பது போல். இதற்கு கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு சண்டை போட வேறு ஒரு கூட்டம் இருக்கிறது.

7. யாருக்காவது கோபம் வரும் படியாக கேள்வி கேளுங்கள். "சுந்திராராமசாமிக்கு ஏன் இவ்வளவு கோபம்", "தயிர் சாதத்திற்கு ஏன் ஊறுகாய்?" என்பது போல். யாருக்காவது கோபம் வரும். வந்தால் நல்லது, உங்கள் பதிவு கொஞ்சம் நேரம் உயிருடன் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

8. மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக எழுதவும். "ஆவக்காய் ஊறுகாய் போடுவது எப்படி" என்பது போல. தெரியவில்லை என்றால் கவிதை எழுதாதீர்கள் அது நகம் கடிப்பது போல் கெட்ட பழக்கம்.

9. நீங்கள் இருக்கும் இடத்தில் வலைப்பதிவு கூட்டம் கூட்டுங்கள், மிளகாய் பஜ்ஜிக்கு தமிழை தொட்டுக்கொள்ளுங்கள். பஜ்ஜியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள். உழைப்பாளர் சிலை பக்கத்தில் என்றால் விஷேசம். பதிவில் போடுங்கள்.

10. இவையாவும் கஷ்டமாக இருந்தால் நல்லவற்றை நல்ல தமிழில் எழுதுங்கள். அவற்றை படிக்க ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அவர்கள் படிப்பார்கள். வாழ்த்துக்கள்.

18 Comments:

அன்பு said...

நீங்கள் முகமூடி போட்டாலும், உங்களின் இந்த பதிவு உண்மை, எதார்த்தம் பேசுகிறது. நன்றி.

சுரேஷ் கண்ணன் said...

சில இடங்கள் அபத்தமாய் இருந்தாலும் நல்ல நகைச்சுவை.

இளவஞ்சி said...

இதைதானையா வயித்தெறிச்சல்ல பொலம்பறதுன்னு சொல்லுவாங்க!?

//நல்லவற்றை நல்ல தமிழில் எழுதுங்கள்// எங்க சில எடுத்துக்காட்டுகள சொல்லுங்க பாப்போம்! அதுல நீங்க எழுதி பால் ஊத்துனது எத்தனைனும் பாப்போம்!!

குற்றம் சொல்லிபேர் வாங்கவே சிலர்...

ROSAVASANTH said...

குற்றம் சொல்வதும், குற்றம் சொல்லி பேர் வாங்குவதும் எனக்கு தவறாக தெரியவில்லை -உண்மையிலேயே குற்றம் என்று இருக்கும் பட்சத்தில்! அந்த நக்கீரன் வேலை பார்க்க துணிவும் தார்மீகமும் மிகவும் தேவை. பலரும் செய்ய தயங்கும் காரியம் அது.

ஆனால் இட்லி வடை செய்துள்ளது இவர் மற்றவரை பற்றி பட்டியலிடும் சீப் பப்ளிசிடி. தனது இந்த பதிவும் அதில் பொருந்திபோகும் என்று கூட உணரவில்லை, அல்லது அதை சொல்லும் நேர்மை இல்லை. இப்படியும் கூட எழுதி அவர் போட்ட பட்டியலில்ன் முதல் ஒன்பதை சாதிக்க முடியும் என்று பத்தாய் சேர்திருந்தால் நேர்மையாய் இருந்திருக்கும், ஆனால் பத்தாவதாய் அடித்த ஜல்லிதான்....!

அல்வாசிட்டி.விஜய் said...

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் பதிவு போடுவதும் எழுத்துப் பழக்கம். நானூறு பேர் இருக்கிற இடத்தில 400 விதமா இருக்க தான் செய்யும்/எழுத தான் செய்வார்கள். நீங்கள் பட்டியலிட்ட 10 ஒன்றுமே இல்லை. Negligible.

ஓய்வாக இருக்கும் போது எழுதிக் கொண்டேயிருந்தால் யார் படித்து பயன் அடைகிறார்களோ இல்லையோ உங்கள் எழுத்து பழக்கத்துக்கும் வாசிப்பு பழக்கத்துக்கும் நல்ல பிராக்டிஸ்.

நற்கீரன் said...

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் பதிப்பு கண்ணில் பட்டிருக்கின்றது. :-)

Muthu said...

இட்லிவடைக்கு தமிழ் வலைப்பதிவுகள் மேல் அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. கடவுளிடம் தமிழ்வலைப்பதிவு ஆரம்பித்தவர் யாரும் அதில் எழுதக்கூடாது வரம் கேட்பவர்தானே, எனவே இதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை.

இந்த இட்லிவடைப் வலைப்பதிவை (கூட) எந்தப் பதிவும் பதியாத நாட்களிலும் குறைந்தது பத்துப்பேராவது வந்து பார்த்துப்போகிறார்கள் என்பது இட்லிவடைக்குத் தெரியாதது ஏனோ ?

சு. க்ருபா ஷங்கர் said...

'படம்' காட்டாமல் இது மாதிரியே தொடர்ந்து ஏதாவது 'களாய்க்க' எழுதவும். கூடிய விரைவில் தோசை பொங்கலாக வாழ்த்துகள் (முதுகில் கட்டப்படும் 'டின்' காயங்களை மட்டும் சமாளித்துவைக்க வேண்டும்).

Anonymous said...

தன் பதிவுக்கு தானே பின்னூட்டம் கொடுக்கறதை பன்னண்டாவது பாயிண்டா சேத்திருக்கலாம்

விட்டுட்டியே க்ருபா...

தோசைபொங்கல்

சு. க்ருபா ஷங்கர் said...

:-))

இது ஓவர்! விட்டா நான் தான் இட்லிவடைன்னு கற்பூரம் ஏத்திடுவீங்க போலருக்கே! :-))

அல்வா

Anonymous said...

Excellent Post. :-)

--Haranprasanna

எம்.கே.குமார் said...

இட்லிவடை,

70 மார்க் போடுறேன்யா உன் பதிவுக்கு.

நீர் எப்போ சொந்த செலவில் இதுக்கு பால் ஊத்தப்போறீர்? :-)

எம்.கே.

Anonymous said...

//பின்னூட்டங்கள் ஒரு மினி Yahoo Groups ஆகிவிட்டன. சில சமயம் அதைவிட மோசமாகவும்.
//
இது பெருமளவு உண்மையே! Many bloggers have their own sets of followers who religiously make comments (mostly
ஜால்ரா!) for whatever they write !!!!!!

//. மேதாவிதனமக எதாவது எழுதுங்கள். உதாரணம் : "பாலியலில் சமுகவியல்", "மகாவிஷ்ணு தான் டார்வின்" , "பஞ்சு
மிட்டாயில் பார்பனியம்" என்பது போல். இதை டிஸ்கஸ் பண்ண படித்த கூட்டம் இருக்கிறது.
//
என்னா குசும்புப்பா உங்களுக்கு ;-)

//5. ஏதாவது வில்லங்கமாக எழுதிவிட்டு காத்திருங்கள். செருப்பு, சானி, மலம் என்று நாகரிகமான பின்னூட்டம்
கொடுக்க சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய மனது பண்ணி பின்னூட்டம் எதாவது கொடுத்தால் உங்கள் பதிவுக்கு
அன்று பம்பர் பரிசுதான். சண்டை போட ஒரு கூட்டம், வேடிக்கை பார்க்க ஒரு பெரிய கூட்டம் என்று உங்கள்
பதிவில் அன்று ஒரு திருவிழாதான்.
//
உங்களுக்கு டைம் சரியில்லேன்னு நினைக்கிறேன் :-( அந்த சிலர் உங்களை நார் நாராகக் கிழித்து தொங்கவிட்டு
விடுவார்கள், ஜாக்கிரதை :-)

//நீங்கள் இருக்கும் இடத்தில் வலைப்பதிவு கூட்டம் கூட்டுங்கள், மிளகாய் பஜ்ஜிக்கு தமிழை தொட்டுக்கொள்ளுங்கள்.
பஜ்ஜியுடன் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்.
//
ஆஹா! பேஷ், பேஷ், இது ரொம்ப நன்னா இருக்கு ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

சு. க்ருபா ஷங்கர் said...

--இலக்கியப்பேரொளி எம்.கே.குமார் wrote:
>இட்லிவடை,

>நீர் எப்போ சொந்த செலவில் இதுக்கு பால் ஊத்தப்போறீர்? :-)

குமார், அந்த வரிக்கு என்ன அர்த்தம்னு தெரியாட்டி எனக்கு தலை ரெண்டா கூட இல்லை, மூணு நாலு, அஞ்சா ஒடைஞ்சுடும். சுத்தமா புரியலை ஒன்னுமே.

யோசிப்பவர் said...

Kelembittaangayya! Kelembittaanga!!!(Read it in Vadivelu Style!!!;)

dondu(#4800161) said...

என்னை மாதிரி செய்யலாமே. அதாவது நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை என் தனிப் பதிவு ஒன்றில் இட்டு விடுவேன். ஆக, என்னுடைய இப்பதிவு எப்போதும் தமிழ்மணத்தில் இருக்கும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
இது வரை 403 பின்னூட்டங்கள். இப்போது நகலிடப் போவதையும் சேர்த்தால் 404.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

////என்னை மாதிரி செய்யலாமே. அதாவது நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை என் தனிப் பதிவு ஒன்றில் இட்டு விடுவேன். ஆக, என்னுடைய இப்பதிவு எப்போதும் தமிழ்மணத்தில் இருக்கும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
இது வரை 403 பின்னூட்டங்கள். இப்போது நகலிடப் போவதையும் சேர்த்தால் 404.

அன்புடன்,
டோண்டு ராகவன் ////

இதுதான் மேட்டரா?
400ங்கறது குறைவா தெரியுதே?

Anonymous said...

ஓவ்வொரு பின்னுட்டதிற்க்கும் தனித்தனியா - நன்றி, வாஙக, வீட்ல நலமா - அப்படின்னு பதில் பின்னுட்டம் போட்டு கணக்கை எத்ற டெக்கினிக்க விட்டுடீங்களே?