பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 28, 2005

வியக்க வைக்கும் கூகிள் - 3

கூகிளில் சில நேரங்களில் சில வார்த்தைகளை கொடுத்து நீங்கள் தேடியிருப்பீர்கள். ஆனால், அந்த வார்த்தை மீண்டும் உங்கள் ஞாபகத்துக்கு வராமல் போகலாம். இதற்காக கூகிள் ஒரு புதிய வசதியை அறிமிகம் செய்திருக்கிறது. அது Search History

உங்களிடம் ஜிமெயில் கணக்கு இருக்கிறது என்றால் கூகிள் முதல் பக்கத்தில் வலதுப்பக்கம் மேல் மூலையில் இருக்கும் 'Sign-in' என்ற லிங்க்கை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.நீங்கள் தேடுவதற்காக கொடுத்த வார்த்தைகள் அனைத்தும் இதில் தேதி வாரியாக பதிவு செய்து வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு இன்று "Who is Tamil Nadu's Super Star" என்று தேடுகிறீர்கள். ஒரு மாதம் கழித்து நீங்கள் என்ன தேடினீர்கள் என்று பாக்க இதில் வசதி இருக்கிறது. நீங்கள் தேடியவற்றில் தேடவும் வசதியிருக்கிறது.பயன் படுத்திப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.

வியக்க வைக்கும் கூகிள் - 1
வியக்க வைக்கும் கூகிள் - 2

3 Comments:

க்ருபா said...

"Who is thamiz manam's next star?"ன்னு போட்டு கூக்ல்-ல தேடினா 'இட்லிவடை'ன்னு எப்போ வரும்? நீங்க தமிழ்மணத்துல நட்சத்திரமா எல்லாம் இருக்க மாட்டீங்களாக்கும்?

Idly Vadai said...

க்ருபா,
எனக்கு தெரிந்து தமிழ்மணத்தில் 'வால்' நட்சத்திரத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டார்கள் ;-)
அன்புடன்,
இட்லி

சு. க்ருபா ஷங்கர் said...

கரெக்ட், எனக்கு இடம் தரமாட்டார்கள்தான்.

அது சரி. நீங்க அடுத்த மாசம் 'தூள்' நட்சத்திரமா இருங்களேன்? இல்ல 'வால்' நட்சத்திரம்னாலும் ஒக்கே.

ஆனா நட்சத்திரத்தோட கடைசி பதிவுல 'வால் நட்சத்திரம்' பத்தி எல்லா விவரங்களையும் புட்டுப்புட்டு வைச்சுடணும். ஓக்கேவா?