பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 08, 2005

மகளிர் தினம்

1908 - மார்ச் 8. நியூயார்க் நகரின் பஞ்சாலைகள் அனைத்தும் சினிமாவில் ஃபிரீஸ் செய்ததுமாதிரி அன்று நின்று போயின. அவற்றில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
"ஆண்கள் சமமாக பெண்களுக்கும் சம்பளம் கொடு!"
"எட்டுமணி நேரம் மட்டும் வேலை செய்வோம்!" என்று கோரிக்கை வைத்து வெற்றியும் பெற்றனர்!"
கிளாரா ஜெட்கின், ரோஸா லக்ஸம்பர்க் ஆகியோரின் பெருமுயர்ச்சியால் 1910 ஆண்டு கோபன்ஹேகனின் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு கூட்டப்பட்டபோது அந்த மார்ச் 8ஐ சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்ட முடிவெடுக்கப்பட்டது.
"வாட் ? உழைக்கும் பெண்கள் தினமா ? நோ நோ" என்று மறுத்துவிட்டது அமெரிக்கா.
பிறகு 1945ல் ஐ.நா. சபை அமைக்கபட்டபோது அக்கோரிக்கையை அமெரிக்கா தடுத்துவிட்டது. எனினும் 1975 "உழைக்கும்" என்பதை எடுத்துவிட்டு வெறும் மகளிர் தினமாக வைத்தால் ஓ.கே என்று அமெரிக்கா ஒப்புக்கொள்ள ஒருவழியாக மார்ச்-8 மகளிர் தினமானது.

பிகு: இன்று மட்டும் நக்கலுக்கு விடுமுறை!

5 Comments:

இளவஞ்சி said...

//"உழைக்கும்" என்பதை எடுத்துவிட்டு வெறும் மகளிர் தினமாக வைத்தால் ஓ.கே என்று//

இது நக்கல் இல்லாம வேற என்னவாம்?? :)

Idly Vadai said...

ஐயா இளவஞ்சி,

சத்தியமா அது நக்கல் கிடையாது. அது தான் உண்மை.
பிகு: எனக்கு பயம் கிடையாது, இருந்தாலும் விளக்க வேண்டியது என் கடமை...

அன்புடன்
இட்லி

S Krupa Shankar said...

ஏதேனும் வெப்டிசைனிங்க் நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறீர்களா? வலைப்பூ வடிவமைப்பு அற்புதம். ப்ளாகர் டெம்ப்ளேட்னா இப்படி இருக்க வேண்டாமோ, வெள்ளவெளேர்ன்னு!

Idly Vadai said...

Krupa,
வலைப்பதிவும் இட்லி மாதிரி வெள்ளையா இருக்கு அவ்வளவு தான்.

க்ருபா said...

சரிதான். அப்போ விளம்பர நிறுவனம் போலருக்கு