பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 04, 2005

பட்ஜெட் டாப் டென்+5


1. பாங்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்தால் 10 ரூபாய் வரி. அதனால் 9999 ரூபாய் எடுக்கவும்.

2. ஏப்ரல் 1ம் தேதி முதல் திட்டமிட்ட படி "வாட்' வரி அறிமுகம். வாட் ? என்று கேட்பவர்கள் எங்கே சென்று பார்க்கவும்.

3. சிகரெட், குட்காவிற்கு கூடுதல் வரி, பீடிக்கு கூடுதல் வரி கிடையாது. அதனால் எல்லோரும் பீடிக்கு தாவலாம். மூக்குபொடிக்கும் வரி உண்டு!.

4. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 50 காசு அதிகரிக்கும். இது தெரிந்ததுதானே ?

5. விலை உயர்ந்த முத்திரை பெயர் கொண்ட நகை வகைகளுக்கு 2 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படும் முத்திரை பெயர் இல்லாத நகைகளுக்கு இந்த வரி கிடையாது. ஆண்கள் கவணிக்கவும்.

6. ஏழை மக்களுக்கு 60 லட்சம் கூடுதல் வீடுகள் கட்டித் தரப்படும். இந்தியாவில் 60 லட்சம் ஏழைகள் தான் இருக்கிறார்களா ?

7. பெங்களூர் ஐ.ஐ.எஸ்., மையத்தை உலக தரத்திற்கு மாற்ற 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அவர்களே ஆச்சரியப்படுகிறார்கள்.

8. மண்எண்ணை, சமையல் கியாஸ் மீதான உற்பத்தி வரி கலால் வரி நீக்கம். இனிமேல் தினமும் விருந்துதான்.

9. சந்திரனுக்கு 2006-2007-ம் ஆண்டில் ராக்கெட் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்

காக பட்ஜெட்டில் ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி போடு.

10. கடன் அட்டை (கிரெடிட் கார்டு), செல்போன் வைத்து இருப்பவர்கள், கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வரு பவர்கள் (`6-ல் 1' திட்டம்) வரு மான வரி கணக்கு தாக்கல்செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. ஆனால், இந்த `6-ல் 1' திட்டத் தில் இருந்து செல்போன் நீக்கப் பட்டுள்ளது. முதல்ல SMSக்கு எதாவது வரி போடவும்.

11. ஜனாதிபதியின் சம்பளம் மற்றும் ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவினங் களுக்கு மொத்தம் ரூ.17 கோடியே 33 லட்சம் ஒதுக்கப் பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட ரூ.38 லட்சம் அதிகம் ஆகும். அதாவது ஒரு மாதத்திற்கு 1.4 கோடி. கொஞ்சம் கம்மிதான்.

12. மீதம் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படும். மின்சாரம் கண்டுபிடிச்சு நிறைய நாள் ஆச்சு, இன்னுமா செய்யவில்லை. சீக்கிரம் செய்யுங்கப்பா.

13. குளங்கள் மற்றும் நீர்நிலை கள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தண்ணி வருமா ?

14. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி, பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநி லங்களில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தவும் மணல் அரிப்பை தடுக்கவும் ரூ.180 கோடியில் திட்டம். அதில் கலக்கபடும் கழிவி நீரை முதல்ல கவனியுங்க.

15. பாலியெஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழைகள், ஆடைகள் மீதான சுங்கவரி விகிதம் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு. நடிகைகள் கஞ்சதனம் இல்லாமல் இனிமேல் டிரஸ் பண்ணிக்கொள்ளலாம்.

இடது பக்கம் (மேலே) பட்ஜெட் பற்றி வாக்களிக்கவும். நன்றி

(படம் உதவி: தினமலர்)

0 Comments: