பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 09, 2005

கடவுளிடம் ஒரு பிராத்தனை ( டாப் 10+10)

நேற்று கடவுள் என் கனவில் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். "இப்படி திடீர் என்று கேட்டால்.. எப்படி". "சரி நாளை வருகிறேன்" என்று சென்றார்.

நாளை கடவுள் கனவில் தோன்றினால் கேட்பதற்கு என்னுடைய லிஸ்ட்.

உங்களுக்கு எதாவது இருந்தால் பின்னூட்டத்தில் கொடுக்கவும். முடிந்தால் கேட்டுவைக்கிறேன்.


1. லாலு பிரதமராக வேண்டும்.
2. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிக்க வேண்டும்.
3. சென்னையில் குழாயை திறந்தால் தண்ணீர் வரவேண்டும்.
4. டிவியில் சீரியல் இல்லாமல் இருக்க வேண்டும்.
5. ஜெயெந்திரர் வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவேண்டும்.
6. பத்திரிக்கைகள் நடிகையின் படத்தை அட்டையில் போடுவதை நிறுத்த வேண்டும்.
7. இராக்கில் அமேரிக்கா பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
8. தமிழ் வலைப்பதிவு ஆரம்பித்தவர்கள் எழுதாமல் இருக்க வேண்டும்.
9. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயில், உலக அதிசியம் ஆக எல்லோரும் ஓட்டு போடவேண்டும்.
10. தமிழ் பற்று கொண்ட டாக்டர் ராமதாஸ், மருத்துவர் ராமதாஸ் என்று அழைக்கப்பட வேண்டும்.
11. மின்னனிலிருந்து மின்சாரம் சேமிக்க எல்லோர் வீட்டிலும் இடிதாங்கி வைக்கவேண்டும். (மழை நீர் செமிப்பு போல்)
12. பார்லிமெண்டில் கூச்சல் கம்மியாக வேண்டும்.
13. சட்டசபையில் மேஜையை தட்டுபவர்களுக்கு ஆணி குத்த வேண்டும்.
14. மீண்டும் பொருட்களுடன் குங்குமம் பத்திரிக்கை இலவசமாக வழங்கவேண்டும்.
15. தமிழ் நாட்டில் காமராஜர் ஆட்சி எப்போது வரும் என்று காங்கிரஸ் உறுதியாக கூற வேண்டும்.
16. அஜித், விஜய் சண்டை போடாமல் இருக்கவேண்டும்.
17. ரஜினி படம் நன்றாக ஓட வேண்டும்.
18. கமல் பேட்டியில் செந்தமிழில் பேசாமல், சாதாரணமாக பேச வேண்டும்.
19. இட்லிவடை இது போல் எழுதாமல் இருக்கவேண்டும்.
20. எல்லோரும் இந்த பதிவு நன்றாக உள்ளது என்று வாக்களிக்க வேண்டும்.

3 Comments:

துளசி கோபால் said...

கடவுள் நாளைக்கு வரேன்னு சொன்னாரா?

அவரோட ஒரு நாள் நமக்கெல்லாம் 100 வருசமாம்! :-)

Kusumban said...

பாசு,

"ஒங்கோடு, எங்கோடு, யுனிகோடு, தனிகோடு"ல கமெண்ட் போட்டா சூம்பிப்போன இட்லி, மெதுவடை மாரி 'கோல்-கோல்'லா தெரிஞ்சுது. நம்ப கமெண்ட்டு இதான் பாசு:

சூப்பர் பதிவு. ஆனா 19,20 கொஞ்சம் ஜாஸ்தி ;-)

அன்புடன்,
குசும்பன்.

கயல்விழி said...

நல்லாய் தான் பட்டியல் போட்டிருக்கிறியள். மருத்துவர் ராமதாஸ் நல்லாய் தான் இருக்கு. அடுத்ததாய் இதையும் சேருங்கள். லிஸ்ட் மறைந்து பட்டியல் வரவேணும். :)