பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 11, 2005

வாழ்த்துக்கள் !


"மண்ணின் மைந்தன்' "கண்ணம்மா' ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த 21 லட்சம் ரூபாய் ஊதியத்தை முதலமைச்சர் சுனாமி நிவாரண நிதிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி வழங்கினார். இந்த தொகையை கோட்டையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஸ்டாலின் வழங்கினார்.

நிதியுதவி அளித்த கருணாநிதிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்ததுடன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 Comments:

Moorthi said...

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதியுதவி செய்யும்போது ஆளும்கட்சி..எதிர்க் கட்சி என்ற பாகுபாடு கூடாது. எல்லோரும் மக்களை மனதில் கொண்டு உதவிகள் செய்தல் வேண்டும். அவ்வகையில் கலைஞரின் நிதியுதவியும் பாராட்ட வேண்டிய ஒன்று.

Kangs(கங்கா) said...

ஆனால் தி.மு.க மக்களுக்கு நேரடியாக களத்தில் இரங்கி உதவி செய்து இருக்கலாம். கருணாநிதியின் சொந்த உழைப்பால் வந்த பணம் சுனாமி நிதிக்கு கொடுத்தது அவரது பண்பைக் காட்டுகிறது.