பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 04, 2004

Mr.பரட்டைத்தலை புதிர்!

Mr.பரட்டைத்தலை ஒரு கிராமத்துக்கு போகிறார். அங்கு ஒரு டீக்கடையில் டீக்குடிக்கிறார். கடையில் உள்ள தினத்தந்தியில் ரஜினியின் புதுப்பட விளம்பரத்தை
பார்க்கிறார். தானும் அந்த படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு வருகிறது. கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்து சான்ஸ் கேட்பதற்கு முன்னால் தன் பரட்டைத்தலையை அழகாக திருத்திக்கொண்டு செல்லாம் என்று, அருகில் டீக்குடிப்பவரிடம்
"அந்த ஊரில் சலூன் இருக்கா ?" என்கிறார்
"இந்த ஊரில் மொத்தம் இரண்டு சலூன் இருக்குங்க, அரசமரத்தடியில் ஒண்ணு அப்புறம் வாய்க்கா ஓரத்தில் ஒண்ணு"

Mr.பரட்டைத்தலை முதலில் அரசமரத்தடியில் இருக்கும் சலூனுக்கு போகிறார். அங்கே, முடிதிருத்துபவர் இவரைக்காடிலும் பரட்டைத்தலை. மற்றும் சலூனில் ஒரே தலை முடி வெட்டிய குப்பை. இது நமக்கு ஒத்துவராது என்று எண்ணி, அடுத்ததாக வாய்க்கா ஓரத்தில் இருக்கும் சலூனுக்கு போகிறார், அங்கே அவர் பார்த்தது இதற்கு நேர் எதிர். முடிதிருத்துபவர் அழகாக முடிதிருத்தப்பட்டு, மீசை செதுக்கப்பட்டு புதுப்பட கதாநாயகன் போல் இருக்கிறார்.
சலூனும் சுத்தமாக இருக்கிறது.

ஆனால் நம்ம Mr.பரட்டைத்தலை மீண்டும் அரசமரத்தடியில் உள்ள சலூனுக்கு போகிறார். ஏன் ?
விடை நாளை

0 Comments: