பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 04, 2004

இவ்வளவு பணக்காரர்களுக்கு ஓய்வூதியம் தேவையா?

கூட்டணி வேட்பாளர்களில் 80 பேர்களின் குடும்ப சொத்து பட்டியலை, பத்திரிகையில் பார்த்தேன். அதன்படி தி.மு.க., அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் குடும்ப சொத்து ரூ.122 கோடி, அ.தி.மு.க., அணியினரின் குடும்ப சொத்து ரூ.44 கோடி. ஆக மொத்தம் 80 பேர்களின் குடும்ப சொத்து மொத்தம் ரூ.166 கோடி. 80 பேர்களின் சொத்தே இவ்வளவு என்றால், மற்ற அரசியல்வாதிகள் சொத்து எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இதில் ரூ.2 லட்சம் சொத்து உள்ளதாக கணக்குக் காட்டியது ஒரே ஒரு வேட்பாளர் தான்.

மேலும் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சத்திற்குள் சொத்து உள்ளவர்கள் ஆறு பேர். மற்றபடி எல்லாருமே நல்ல வசதி படைத்தவர்கள் தான். இதெல்லாம் வாக்காளர் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஒன்றுமில்லை.

ஆனால், வருமான வரித் துறையினருக்கு இது அவசியம் தேவைப்படும். சென்ற ஆண்டு வருமான வரி

தாக்கல் செய்யும் போது சொத்து இவர்களுக்கு எவ்வளவு இருந்தது? இந்த சொத்துக்கு ஒழுங்காக வருமான வரி கட்டியிருக்கின்றனரா? அப்படி கட்டப்பட்ட வரி எவ்வளவு அல்லது குறைவாக கட்டியிருந்தால் இன்னும் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை எல்லாம் பத்திரிகை வாயிலாக வெளியிட வேண்டும்.

அதேசமயம் 33 ஆண்டுகள் அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 2005 முதல் ஓய்வு ஊதியம் இல்லை என சட்டம் கொண்டு வர எண்ணுகிற அரசியல்வாதிகள் மற்றொரு விஷயத்தை யோசிக்க வேண்டும்.

கோடீஸ்வரராகவும், லட்சாதிபதியாகவும் இருக்கிற நீங்கள் ஒரு ஐந்து ஆண்டுகள் எம்.பி., ஆக இருந்து விட்டால், ஓய்வூதியம் பெற தகுதி உடையவர் தானா என இவர்கள் சற்று யோசித்துப் பார்த்தால் நல்லது.

எனவே, அடுத்து வரும் புதிய மத்திய அரசு, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பற்றி மறுபரிசீலனை செய்தால் கூட நல்லது.

ஆ.பட்டிலிங்கம், பேரூர்.
நன்றி தினமலர்
4/5/2004

0 Comments: