பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 03, 2004

அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வேட்புமனு தாக்கல் வாரம்.
வேட்பு மனு தாக்கல் படிவத்தில் என்னென்ன கேள்விகள் இருக்கும் அதற்கு வேட்பாளர்கள் என்ன தகவல் கொடுக்கிறார்கள் என்று செய்திதாள்களில் படிப்பதே ஒரு சுவாரசியம். அவ்வளவு காமெடிங்க!. சமீபத்திய உதாரணம் நெல்லை வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தியன்.

வேட்புமனு படிவத்தில் வேட்பாளர்கள் உண்மையான தகவல்கள் தான் தருகிறார்களா ? அதை தேர்தல் கமிஷன் எப்படி சரிப்பார்கிறார்கள் ? என்பது கடவளுக்குத்தான் வெளிச்சம். சிலர் அவர்களுடைய வங்கியில் வெறும் 1000 ரூபாய்தான் வைத்துள்ளார்களாம்!. சிலர் வாடகைவீட்டில் தான் இருக்கிறார்களாம். இதற்கு காரணம் தேர்தல் கமிஷன்தான். அவர்கள் கேட்ட கேள்விகள் தப்பு. அதனால் திருத்தி அமைத்த விண்ணப்ப படிவம் இங்கே.

அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள் இதோ !

1. விண்ணப்பதாரர்(வேட்பாளர்) பெயர் :
[ __________________________ ] [ __________________________ ]
(பிகு: பினாமி பெயர், உங்கள் நிஜப்பெயர் பெயர் (அப்பா,அம்மா வைத்த பெயர்) இரண்டையும் தரவும்)

2. தற்போதைய முகவரி
அ) ஜெயில் பெயர் : ______________________
ஆ) செல் நம்பர் : _________________________
(பிகு: ஜெயில் செல் நம்பர், செல் போன் நம்பர் அல்ல ).

3. கட்சியின் பெயர் ( நீங்கள் கடைசியில் இருந்த 5 கட்சியின் பெயர்களை மட்டும் குடுக்கவும் )
.
.
.
.
.

4. நீங்கள் கடைசியாக இருந்த கட்சியிலிருந்து விலகியதற்கான காரணம் ?
அ) சீட் கிடைக்கவில்லை வெளியேறினேன்
ஆ) சீட் கேட்டேன் வெளியேற்றப்பட்டேன்
இ) உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை.
ஈ) வெளிநாட்டவர்

5. நீங்கள் தேர்தலில் நிற்பதற்கான காரணம் ?
அ) பணம் பண்ணுவதற்கு.
ஆ) கோர்ட் கேஸிலிருந்து விடுபடுவதற்கு.
இ) அதிகார துஷ்பிரயோகம்.
ஈ) பொதுத்நல தொண்டு
உ) சும்மா எல்லா நாடுகளையும் சுற்றி பார்க்க ஆசை
(பி.கு: நீங்கள் 'ஈ'யை தேர்ந்தெடுத்திருந்தால் அரசு மனநோய் மருத்துவரின் சான்றிதழை இந்த விண்ணப்படிவத்துடன் இணைக்கவும் )

6. பொதுநலப் பணியில் எவ்வளவு காலம் ஈடுபட்டிருந்தீர்கள் ?
அ) 1-2 வருடங்கள்.
ஆ) 2-6 வருடங்கள்.
இ) 6-15 வருடங்கள்.
ஈ) 15 வருடங்களுக்கு மேல்.

7) உங்கள் மேல் இருக்கும் கிரிமினல் வழக்கு விபரங்களை தரவும் ( எவ்வளவு
கூடுதல் பக்கங்களை வேண்டுமானாலும் இணைக்களாம் )

.....

8) எவ்வளவு வருடம் நீங்கள் ஜெயிலில் இருந்திருக்கீர்கள் ?
( பி.கு: இந்த கேள்வியையும் 6ஆம் கேள்வியையும் குழப்பிக்க வேண்டாம் ).
அ) 1-2 வருடங்கள்.
ஆ) 2-6 வருடங்கள்.
இ) 6-15 வருடங்கள்.
ஈ) 15 வருடங்களுக்கு மேல்.

9) எதாவது நீதி மோசடியில் ஈடுப்பட்டீர்களா ?
அ) ஆம்
ஆ) நிச்சயமாக
இ) இல்லை
ஈ) இது வெளிநாட்டு சதி.

10) சமீபத்தில் நீங்கள் ஊழல் செய்தக் காட்சி எந்த மீடியாவில் வந்தது ?
அ) தொலைக்காட்சி
ஆ) VCD/டேப்
இ) DTS எஃபெக்டுடன் கூடிய DVDயில்
ஈ) பக்கத்தில் உள்ள தியேட்டரில்

11) உங்களின் சொத்து விவரம்
அ) 10 பழைய ஓட்டை காலணாக்கள்
ஆ) நேற்று தான் மஞ்சள் நோட்டீஸ் குடுத்தேன்.
இ) எவ்வளவு என்று தெரியவில்லை
ஈ) எதிர் கட்சி வேட்பாளரை விட கம்மி.

12) இந்தியாவை முன்னேற்ற நீங்கள் எதாவது செயல் திட்டம் வைத்திருக்கிற்களா ?
அ) இல்லை
ஆ) இல்லை
இ) இல்லை
ஈ) இல்லை

13) நீங்கள் சாதித்ததை கீழே குடுக்கப்படு இருக்கும் இடத்தில் எழுதவும்.
[ ______ ]

கை பெருவிரல் அடையாளம் இங்கே வைக்கவும்
( பிகு: விண்ணப்பதாரரின் கை பெருவிரல் அடையாளம், விண்ணப்பத்தை பூர்த்தி
செய்தவருடையது அல்ல )

0 Comments: