பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 12, 2004

ஹாலிவுட் டாப் 10-1

1. Italian Job

இத்தாலிய பெண் அண்டோனியா மொய்னோ, இந்திய பெண் சோனியா காந்தியாக நடித்திருக்கும்
படம். இடைவேளை வரை உட்கட்சி பூசல்களை எப்படி சமாளிக்கிறார் என்பதிலேயே பேகின்றது.
அதனால் கதையில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. தன் கணவரை கொன்ற விடுதலை புலிகளிடம் நட்பு
பாராட்டும் ம.தி.மு.க, தி.மு.கவுடன் கூட்டணிவைத்து "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்று கூட்டணி தர்மத்திர்க்கு புதிய விளக்கம் தந்துள்ளார். தயங்கி தயங்கி
குடியுரிமை பெறுகிறார் அதைப் பார்த்து அவர் கட்சிக்காரர்கள் பூரித்து போகிறார்கள். படத்தில் பல
இடத்தில் வசனங்களை எழுதிவைத்துக்கொண்டு நிறுத்தி நிதானமாக பேசுகிறார் பத்திரிக்கைகள்
பாராட்டுகின்றன
. தன் கட்சியின் வசம் உள்ள பாண்டிச்சேரியை மீட்டாரா இல்லையா என்பதே
Italian Jobபின் கதை.

2. Airforce One

அமெரிக்க ஜனாதிபதியுடைய Airforce One என்ற அதிநவீன விமானம் போல், துனணப்பிரதமர் அத்வானி
அதிநவீன பஸ்ஸில் ரதயாத்திரை புறப்படுகிறார். பஸ்ஸில் sofa, DVD player, bathroom, TV எல்லாம்
உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்கிறார். மக்கள் கூட்டம் அலைமேதிகிறது.
அத்வானியை பார்க்கவா அல்லது பஸ்ஸை பார்க்கவா என்று தெரியவில்லை. அத்வானியின் நண்பர்
ஜூதேவ் ஊழல் செய்துவிட்டு ரஜினி ஸ்டைலில் மீசையை முறுக்குகிறார். நல்ல தமாசு.

3. Mummy returns.

ஜெயலலிதா இரண்டாவது முறையாக பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
ஜெயலலிதா பிஜேபியுடன் கூட்டணி அமைத்தாறா அல்லது பிஜேபி அவருடன் கூட்டணி
அமைத்ததா என்று ரசிகர்களுக்கு புரியவில்லை. ஸ்டண்டு நடிகராக மணிசங்கர் ஐயர் மிகவும்
தையரியமாக நடித்துள்ளார். அம்மா என்றால் வீரம், அம்மா என்றால் தைரியம், தேர்தல் என்றால்
வாபஸ் என்பது கதையின் punch line.

4. MIB - II

Men in Black. தி.க கட்சியினர் கருப்பாக சட்டையணிவதால் இந்தபெயர். கொள்கை என்பதற்கு என்ன
விளக்கம் என்று தேடுவதே இப்படத்தின் கதை. முன்பு ஒரு காலத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்து புகழடைந்தார்கள். வேட்டி கோமணம் ஆனது போல் இவர்களின் கட்சி ஆகிவிட்டது பரிதாபத்துக்குரியது.

5. Catch me if you can

திரு வைகோ அவர்கள் புலியை ஆதரித்து பேசி, என்னை பிடிக்க முடியுமா ? என்று சாவால்
விடுகிறார். பிடிப்பட்டு உள்ளே போகிறார். இந்த படத்தில் பல நல்ல காட்சிகள் உள்ளன - கள்ளத் தோணி
ஏறி இலங்கை செல்கிறார், மாறனின் மறைவால் உள்ளம் உருகி அழுகிறார், சிறைச்சாலையிலிருந்து
சூட்கேசுடன் வருகிறார், ஆவேசமாக பேசுகிறார். சன் டிவியில் "சகோதர பாசத்தினால்" இந்த காட்சிகள்
சென்சார் செய்யப்படுகிறது.

6. You have got a mail.

தினமும் தன்னுடைய உடன்பிறப்புக்களுக்கு முரசொலியில் ஒரு கடிதம் எழுதிகிறார் படத்தின்
ஹீரோ. அதைப்படித்துவிட்டு எல்லோரும் குழம்புகிறார்கள். கழகம் ஒரு குடும்பம் என்று அடிக்கடி
சொல்கிறார். அவருக்கு புரிகிறது, மக்களுக்கு புரியவில்லை. டாக்டர் prescription போல் தினமும் 2
அறிக்கை விடுகிறார் ( சன் நியூஸ் பார்க்கவும்). பாலசந்தர் படத்தில் வரும் மனசாட்சி கதாப்பாத்தை போல்
மாறன் சிறப்பாக செய்துள்ளார். ஹிந்தியை எதிர்க்கிறார், தயாநிதி அதை படிக்கிறார், டில்லிக்கு செல்கிறார்.
உடன்பிறபுக்கள் பிறப்பது திமுகவுக்காக.
பதவி துடிப்பது ஸ்டாலினுக்காக
கட்சி வளர்ப்பது குடும்பத்துக்காக
என்ற பாடல் அருமையாக வந்துள்ளது.
முதல் சீனில் வரும் பேராசிரியர் அன்பழகன் பிறகு காணவில்லை.

7. Sixth Sense

சந்தர்பவாதத்தை ஆறாவது அறிவாக கொண்ட பா.ம.க பற்றிய படம். படத்தின் ஹீரோ
ஒரு சைக்கோ தனக்கு கோபம் வந்தால் பச்சை மரங்களை வெட்டுகிறார்.
விளம்பரத்துக்கு ரஜினியை கிண்டல் பண்ணுகிறார். கூடுவிட்டு கூடு பாயும் பழைய விக்கிரமாதித்தியன்
கதையின் உள்டா. குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.

8. True Lies

இதில் நடித்திருக்கும் அனைவருக்கும் ஒரு போட்டி வைக்கப்படுகிறது. யார் உண்மையான
பொய் சொல்கிறார்கள் என்று.
ஜெயலலிதா - வாஜ்பாய் தான் அடுத்த அனுபவமுள்ள பிரதமர்
அத்வானி - அண்ணாதுரை வழியில் தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா வழிநடத்தி வருகிறார்.
கலைஞர் - 25 கோடி தேர்தல் நீதி டீ-காப்பி செலவிற்கு.
சோனியா - ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை எனக்கு சரியாக புரியவில்லை.
வைகோ - கூட்டணி தர்மத்துக்காக பொடாவை ஆதரித்தேன்.
வாஜ்பாயி - இந்தியா ஒளிர்கிறது.
கடைசியில் போட்டி டிராவில் முடிகிறது.

9. Mission Impossible 2

அரசு ஊழியர்கள், டாக்டர்கள், பஸ் டிரைவர்கள் ஸ்டரைக் செய்கிறார்கள். பிறகு அம்மாவிடம் மன்றாடுகிறார்கள்.
இந்த மிஷனில் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பதே கதை.

0 Comments: