பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 24, 2004

ஏன் இட்லிவடைக்குள் ஒளிந்து கொள்கிறேன்?

என்னுடைய வலைப்பதிவில் வந்த Top 10 Movies ஒரு சிறு சலசலப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் நன்றாக இருக்கிறது என்றும்,சிலர் "வெளியிலே வாடா
பார்த்துக்கிறேன்" என்று மிரட்டியிருக்கிறார்கள்.என்னுடைய வலைப்பதிவில் எழுதியது
யாரை புண்படுத்தும் நோக்கத்துடன் இல்லை.

திரு முகுந்த் உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லலாம்,
அதில் தப்பு எதுவும் இல்லை என்றார். நீங்கள் என்னை பற்றி உயர்வாக கூறாவிட்டாலும்,
நீங்கள் எழுதியது நன்றாக உள்ளது என்று எனக்கு தனியாக ஈமெயில் அனுப்பியுள்ளார்.
அவருக்கு எனது நன்றி.

பின் ஏன் இட்லிவடைக்குள் ஒளிந்து கொள்கிறேன்? தைரியமாக வெளியிலே வாடா
என்றால், ஒளிந்து கொண்டு எழுதுவதில் ஒரு சிறு சந்தோஷம் அவ்வளவுதான்.
இவ்வாறு எழுதுவதில் எனக்கு மிகவும் தெரிந்தவரை கிண்டல் செய்யமுடிகிறது, ஏன் என்னை
நானே கிண்டல் செய்துக் கொள்கிறேன். இது ரொம்ப நாள் நீடிக்காது. மனிதர்கள் தப்பு
செய்வார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்.
It is only a matter of time !. காத்திருங்கள்.

0 Comments: