பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 16, 2004

ழ-வும், ராயரும்.

ழ-வும், ராயரும்.

கொஞ்ச நாள் ராயர் கிளப்பை ஒரு நோட்டம் விட்டேன், (ராயர் கிளப் என்பதை வாத்தியார் கிளப் என்று பேர்மாத்தலாமுங்கோ !)

நாட்டுல சில நல்ல விசயமெல்லாம் நடக்குது, விருமாண்டி விளக்கமாறு, ழ கணினி, ஜீரோ டிகிரி னு கலக்கலா போகுது. வெங்கட் ப்லாக் எழுதறார், பத்திரி எழுதறார் எல்லாரும் எங்கயோ போய்டாங்கையா . சரி நாமும் கொஞ்சம் எழுதலாமேனு பாத்தேன். பாத்தா வெங்கட் அண்ணா பீல் பண்ணி இருக்கார். தமிழ் லைனக்ஸ் சர்வர் வேற காலவாரிடுச்சாம் உடம்பு வேற சரியில்லையாம் அப்பறம் சுஜாதா வேற இவர் போர எங்கயும் சொல்லலையாம். ஜெயலலிதா போல் குட்டிகதை எல்லாம் சொல்லராறு.

வெங்கட் புலம்பறதை பாத்தா கவலையா இருக்கேனு அவர் தமிழ் லைனக்ஸ் சைட்டுக்கு போய் பாத்தேனுக்க , ஒரு மாசம் முந்தியும் சரி , இப்பவும் சரி இவர் பேரு மட்டும் தான் சைட்ல இருந்துச்சி . தமிழ் லினக்சே இவர் தான் செஞ்சாரோனு தோனிச்சிங்க .. அப்பவே எனக்கு கோவம் பொத்து கிட்டு வந்துச்சி... சுஜாதாவை என்ன செய்யறதுனு. அப்பறம் தான் வி"யமே விளங்குச்சி நம்ம வெங்கட் தமிழ் லினக்ஸ் சைட்டையே ரொம்ப திக்கி திணறி தான் பாத்துகராறாம். அப்பறம் தமிழ் லினக்ஸ் எப்படி நிறுவரது அப்படினு ஒரு ஃபைல் எழுதி இருக்காராம். சாரிச்சது ல அந்த ஃபைல யூஸ் பண்ணா இன்ஸ்டால் பண்ண முடியலையாம். பாவமுங்க வெங்கட் . திடீர்னு இளசுங்க இவர் ஏரியால கைவெச்சதும் டென்சன் ஆயிட்டார். ஆனா நிஜமாவே வேலை செய்யர வசீகரன் , சிவராஜ் எல்லா சும்மா இருகாங்க குறைக்குடம்......

நம்ம முருகன் கொஞ்சம் ஓவர்...

சுஜாதானு பேர் செல்லி கூப்பிடமாட்டார், வாத்தியார்னுதான் கூப்பிடுவார்) இப்ப தமிழ் நாட்டிலே கூட்டனி சீஸ்சன் அதனால் திடீர்னு.
மன்னவனும் நீயோ! வள நாடும் உனதோ ! உன்னை அறிந்தோ யாம் தமிழை ஓதினோம் எம்மை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ அப்படின்னு முருகு வெங்கட் கிட்ட ஒட்டிகிட்டருங்கோ . வெங்கட்டும் விரந்தேற்றுகிட்டாருங்கோ.

இவர்கள் ஒரு technique வைத்து உள்ளார்கள் தங்கள் எழுதியதை யாராவது படிக்க வேண்டும் என்றால் அதில் சுஜாதா பற்றி ஒரு வரி இருக்க வேண்டும். இரா.மு புஸ்தகம் முன்னுரையில வாத்திக்கு ஒரு போற்றி, இப்ப அமுதசுரபினு ஒரு பத்திரிக்கை, அதுல சுஜாதா எழுதிய ஒன் லைனர் எல்லாம் quote பண்ணி குடத்தை உடைச்சிப்புட்டாறு.

இந்தபக்கம் பாத்தா ழ ல புலம்பல்:

என்ன உழச்சாலும் ப்ரயோசனம் இல்லையாம் . ஜெயராதா அம்மையார் ஃபீலிங் . சிவக்குமார் சைட் சரி பண்றார் ஐ சைட் இல்லீங்கோ வெப்சைட்.

எது எப்படியோ ழ-கணினிக்கு இவர்களால் இலவச விளம்பரம் கிடைத்துவிட்டது. அவர்களுக்கு ழ- குழுவினர் என்ன கைமாறு செய்ய
போகிரார்கள் ? அடுத்த முறை இவங்க எல்லாருக்கும் பட்டம் கொடுக்கறேன்.

அப்பறம் இன்னோரு சேதி ...

மொசிலானு ஒரு ப்ரௌசருங்கோ அதல ஒரு 5000 வார்த்தையை தமிழ்ல மொழிபெயர்தாங்கலாம் . அப்பறம் வட இந்தியால இருந்து ஓப்பன் ஆஃபீந... கடனுக்கு வாங்கிகிட்டு தமிழை தான் தான் வளக்கரதா சிலர் பெருமை பட்டுக்கறாங்கலாம் இன்னொரு குழுல பேசிகிட்டாங்க. இது ஊர்வம்பு இல்லங்க பட்டி மன்றம்

போதுமான மேட்டர் இருக்கு இனி தமிழை வளர்பது யார் அப்படினு பட்டிமன்றம் ஆரப்பிக்கலாம்னு தோன்ச்சி

நடுவர் டைனோ

அயல்நாட்டில் வாழ் தமிழர்களே அப்படிங்கற அணியில் 3 பேருங்க

1. வெங்கட் , முகுந்த், திடீர் வருகை - இரா முருகன்.

தமிழக தமிழர்களே என்று அறிவிக்க

1. ஜெயராதா, சிவக்குமார் , மன்மதன் மூனுபேர் இருகாங்க

டிஜ்ஜிடல் காமிரா, ரன்னிங் கமண்டரி உதவி - பத்ரி

டைனோ : அவையோரே ஆன்றோரே குழுவில் பங்கேற்பவர்களே , குழுவை அமைதியாக கவனிப்பவர்களே, குழுவில் தூங்கிகொண்டிருப்பவர்களே உங்கள் அனைவருக்கும் தாய்தமிழின் தலைமகனாம் டைனோவின் முதல் வணக்கம்.

(இரண்டு முறை படிக்கவும் - கவிதை)
இணையத்தில் தமிழ் வளருதுங்கோ நல்லா வளருதுங்கோ
குடுமி புடி சண்டை எல்லாம் நடக்குதுங்கோ நல்லா நடக்குதுங்கோ
ஆனா இதை எல்லாம் நல்லபடியா வளக்கறது யாருங்கோ அது யாருங்கோ

இதை கண்டுபிடிக்க ஒரு விவாதம் நடத்தலாம் அப்படின்னு மரத்தடி ல உக்காந்து முடிவெடுத்தோமுங்க. குழுக்கல்ல இருக்க எல்லா அஞ்சலையும் படிச்சதுல குழுவுல நிறைய வேற நாட்டு தமிழருங்க இருக்கறது தெரிஞ்சதுங்க. மொத்தில் தமிழை வளக்கறது நானுங்கனு அடிச்சி பேச வெங்கட்ட கூப்படறேன்.

வெங்கட்: நடுவர் அவர்களே ! நீதி தேவதையின் துளாக்கோளை கையில் ஏந்திக்கொண்டிரும் கோமகனே தமிழ் தாயின் தலைமகனே வணக்கம் !
கடந்த ஐந்து வருடங்களாக இதுவரை தமிழ் கூறும் நல்லுகுக்கு 51245 மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கிறேன். 73 கட்டூரைகள் எழுதி இருக்கிறேன். இரண்டு எப்படி ஆவணம் தயாரித்திருக்கிரேன். 73498 பதில் அஞ்சல் போட்டிருகிறேன் அதில் 67223 சண்டை 6275 சமாதானம். ஒரு தமிழ் இணைய தளத்தை ஆங்கிலத்தில் நடத்திக்கொண்டிருக்கிறேன். அதில் காணாமல் போன தலைப்புகள் உட்பட இதுவரை 9845 தலைப்புகளில் கட்டுரை எழுதி இருக்கிறேன். 1563 வலைப்பூ கட்டூரை எழுதி சாதனை படைத்திருக்கிறேன்.

டைனோ(நடுவர்) : பெரிய சாதனை இதெல்லாம் தமிழ் மக்களூக்கு புரிந்ததா

வெங்கட் : அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை பென்குயினுக்கு புரியும். இதற்கெல்லாம் மேல் என் அறிவை சிலர் திருடிவிட்டார்கள் இதையும் உங்களிடம் முறையிட்டு நீதி கேட்க வந்திருக்கிறேன். நடுவரவர்களே. மனுநீதி சோழனாய் நின்று எனக்கு நீதிவழங்குங்கள். என்னை ஏமாற்றி என் அறிவஒ நல்லிரவில் திருடியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் your honour பாடம் புகட்டுங்கள்

டைனோ: சரியான புள்ளிவிவரங்களோடு வெங்கட் அவர்கள் விளக்கி இருக்கிறார். நன்றி வெங்கட் . வெங்கடின் தமிழ் சேவையைக்கண்டு வியந்து நிற்கும் எதிர் அனியினரே இனி நீங்கள் காலி. பெண்புலியே வருக வெங்கட்டுகு சிறந்த பதில் தருக என ஜெயராதாவை அழைக்கிறேன்

ஜெயராதா : ஆன்றவிந்தடங்கிய கொள்கை சான்றான்மையால் முறை கொடாது தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவரவர்களே அவைக்கண் வீற்றிருக்கும் நல்லோரே வல்லோரே உங்கள் அனைவருக்கும் தமிழ் நெஞ்சத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஐயா மடலாடும் குழுக்கலில் பங்கு பெற எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும். என் சார்பாக எங்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிவக்குமார் பேசுவார். நன்றி வணக்கம்

டைனோ : அற்புதம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் வெங்கட்டின் அஞ்சல்களை அனைத்தும் வெட்டி வேலை என்பதை ஒரு வரியில் சொல்லாமல் சொல்லிச்சென்றுவிட்டார் அடுத்து முருகன். கவிஞ்ஞரே வருக நல்வாக்கு தருக.. தமிழகத்தில் இருந்தாலும் சுவிசர் லாந்தில் இருந்தாலும் நீங்கள் பேச்சால் அனுபவத்தால் அயல் நாட்டு தமிழரே!!! வருக ராயரே வருக!!!

முருகன் : அமுத சுரபியை குப்பையில் போட்டாலும் அதுவும் சுஜாதார்பணம் என்று வாழ்ந்தவன் நான் . என் முழ நீள கவிதைகளை மக்கள் மனங்களில் பதிப்பித்தேன் . சமுதாயம் விழிக்க மரத்தடிக்கு சென்றேன், அப்போதும் சரிவரவில்லை ராயர் க்ளப்புக்கு போனேன் கூட்டம் கூட்டி கவிதை சொல்லிப்பார்தேன் யாருக்கும் புரியவில்லை, என் தாய் தமிழின் ஆழம். கடைசியில் சுஜாதா என்னை உலகுக்கு காட்டினார்.. விட்டுவைத்தேனா அவரை அவரை க்ளப்புக்கு அழைத்தேன் வரவில்லை இனி ஒரு பெக்கோடு வாழ முடிவெடுத்து விட்டேன். வெங்கட் அவர்களே கைத்தாங்கலாக என்னை என் இருக்கைக்கு அழைத்து செல்லுங்கள் அமர்ந்துகொண்டே க்ளபில் தமிழ் வளர்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்

டைனோ : உணர்சி பூர்வமாக பேசிவிட்டார் இதற்கு மேல் தமிழ் வளர்க முயன்றவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. இவருக்கு எப்படி சிவக்குமார் பதில் தரபோகிறார்.

சிவக்குமார் : அனைவருக்கும் வணக்கம். I strongly believe that doing work on applications for Windows platform is helping Microsoft to
prolong their monopoly a bit longer. அதனால ஒரு டீம் ஆரம்பிச்சி லினக்ந... தமிழ்ல செய்யறோம். ஓசில சாஃட்வேர் கிடைக்குது . தமிழ்ல இருக்குது. இதுல மாணவர்களை ஈடுபடுத்தி இருக்கோம் அவங்களூம் தமிழ்ல எல்லாம் செய்யறாங்க. தமிழக மாணவர்களை தமிழ் ல வேலை செய்ய வைக்கதை பெரிய சாதனையா கருதறோம்.

டைனோ : சபாஷ் ஓஹோன்னானாம். நல்ல முயற்சி அடுத்து முகுந்த் தமிழகத்திற்கு வந்து தமிழ் வளர்துவிட்டு செல்பவர் இவர் வெளிநாட்டுக்கு சென்று எப்படி தமிழ் வளர்தார் என்று விளக்க வந்திருக்கிறார்.

முகுந்த் : நடுவரவர்களே இலக்கிய சிந்தனை வளம் பெற்ற பெரியோரே (உங்களூக்கு கம்யூட்டர் சொல்லித்தரேன் உங்க பத்திரிகையில் என்னை கண்டுகோங்க - மெதுவாக). வணக்கம். கணினியில் தமிழ் வளர்க தமிழகத்திலுருந்து பல முறை முயன்றேன் முடியவில்லை. அயல்நாட்டில் சென்று தமிழ் வளர்க முடிவு செய்தேன் . சிவக்குமார் தமிழ் மாணவர்களூக்கு தமிழ் சொல்லித்தந்தார் நானோ வட இந்தியர்களுக்கு தமிழ் சொல்லித்தந்தேன் அவர்கள் மாணவர்களை வேலை வாங்கினார்கள் நாங்களோ ஒரு கல்லூரிக்கு சென்று 600 மாணவர்களூக்கு உட்கார வைத்து சொல்லிக்கொடுத்தோம் இப்போது சொல்லுங்கள். யார் சிறந்தவர் என்று. 5000 சரங்களை மொழிபெயர்த நானா அல்லது 80,000 சரங்களை மொழிபெயர்த்த அவரா.

டைனோ : சரியான போட்டி - இந்த கேள்விக்கு விடை செல்ல என்னால் முடியவில்லை திண்ணையில் தாம்பூலம் தரதா வெங்கட் சொன்னதை நம்பி இந்த பட்டிமன்றத்தை ஆரம்பிச்சேன் இப்படி ஆயிடுச்சி. இதற்கு விடை சொல்ல மன்மதன் அவர்களை அழைக்கிறேன்.

மன்மதன் : Tamizha have translated Mozilla and is translating many other utilities/applications. Zha have translated KDE gui, OpenOffice (better
glossarys than the bharateeyaoo team), is translating Fedora, and integrating all into a packaged Tamil Dekstop OS with Office/Multimedia
tools. அதனால் தமிழக தமிழர்கள் தான் சிறந்தவர்கள் அப்படினு தீர்பு சொல்லும்படி நடுவர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

டைனோ மூட்டையை கட்டி ரெடியா நீங்க வளத்த தமிழில் நான் ரொம்ப நொந்து போய்டேன் ஆள விடுங்க ஜீட் ..........

டைனோ என்ற நடுவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை .. முக மூடி அணிந்திருப்பார் கண்டுபிடித்து தருபவருக்கு 1000 பொற்காசுகள் இலவசமாக தரப்படும்.

0 Comments: